புது மலர் டீச்சரை பார்த்து பழைய மலர் டீச்சர் சொன்னது என்ன தெரியுமா?

Bookmark and Share

புது மலர் டீச்சரை பார்த்து பழைய மலர் டீச்சர் சொன்னது என்ன தெரியுமா?

ப்ரேமம் படத்தில் ஒரு மேஜிக் எலமென்ட் என்றால் அது மலர் டீச்சர் தான். அத்தனை எளிமையான, பொருத்தமான நடிப்பின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். 

இவரின் உண்மையான பெயர் சாய்பல்லவி என்பது மறந்து போகும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் மலர் டீச்சர் மலர் டீச்சர் புராணம் தான் பாடிக்கொண்டிருந்தது. ப்ரேமம் வெற்றிக்கு காரணம் கல்லூரி லாஸ்ட் பெஞ்ச் மாணவர்களின் வாழ்கையை அப்படியே உரித்து வைத்திருந்த மிகநேர்த்தியான காட்சி பதிவுகள் தான்.

ஒரு மொழியில் ஒரு படம் ஹிட் என்றால் உடனே அது வேறு மொழியில் ரீமேக் செய்யப்பட வேண்டும் என்ற நிலைக்கு ப்ரேமம் மட்டும் விதிவிலக்கா. பண்ணிட்டாய்ங்கரீமேக்..

ஆரம்பத்தில் ஸ்ருதிஹாசன் தான் மலராக நடிக்கிறார் என்று தகவல் வந்த போதே மீம்ஸ் பீரங்கிகள் ஸ்ருதிஹாசனை துளைத்து எடுத்தன, பிறகு அந்த விஷயம் அமுங்கி போனது.

சில தினங்களுக்கு முன்பு மலரே நின்னே என்ற ப்ரேமம் பாடலின் தெலுங்கு பதிப்பு ப்ரோமோ என்று படக்குழுவினர் ஒரு வீடியோவை ரிலீஸ் செய்தனர்.

ஏற்கனவே ரசிகர்கள் நினைத்தது போல, சாய்பல்லவியிடம் இருந்த அந்த மேஜிக் ஸ்ருதிஹாசனிடம் மிஸ்ஸிங். இது போதுமே, இத வச்சு நாங்க நாலு வாரம் என்ன நாலு மாசம் ஓட்டுவோம் என்கிற பாணியில் பரபரப்பாக இறங்கி விட்டனர் ப்ரேமம் சாய்பல்லவி ரசிகர்கள், இவர்களுக்கு துணையாக நிவின் பாலி ரசிகர்கள் ஒரு புறம் இருந்து மீம்ஸ் ஏவுகணைகளை படக்குழுவின் மீது வீசவே, விளைவு இன்று மதியம் முதல் அந்த தெலுங்கு பதிப்பு பாடலின் வீடியோவிற்கு கமென்ட் செய்யும் ஆப்சன் ப்ளாக் செய்யப்பட்டது.

நிலைமை இப்படியிருக்க, கோடம்பாக்க செய்தி தொடர்பாளர் ஒருவர் சாய்பல்லவியிடம் இது குறித்து தொலைபேசியில் கருத்து கேட்க, சாய் பல்லவி கூறியது என்ன தெரியுமா? நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்.. என்ற ஒரே வாக்கியம் தானம்.


Post your comment





Related News
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
நாக சவுரியாவுடன் மோதலா? - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்
இதுக்கு தான் கிளாமரா நடிக்காம இருக்கேன் - ரகசியத்தை போட்டுடைத்த மலர் டீச்சர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions