‘சங்கமித்ரா’ படத்திலிருந்து விலகியது ஏன்?: ஸ்ருதிஹாசன் விளக்கம்

Bookmark and Share

‘சங்கமித்ரா’ படத்திலிருந்து விலகியது ஏன்?: ஸ்ருதிஹாசன் விளக்கம்

சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாய் உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் நீக்கப்பட்டுள்ளதாக அப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், ஸ்ருதிஹாசன் தானே அப்படத்திலிருந்து விலகியுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ஸ்ருதிஹாசனின் செய்தி தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: துரதிருஷ்டவசமாக ‘சங்கமித்ரா’ படத்தில் ஸ்ருதி நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 2 வருடங்களாக இந்த கதைக்காக எப்படி தன்னை தயார்படுத்திக் கொள்ளவேண்டும், இதற்காக எப்படி நேரம் ஒதுக்கவேண்டும் என்ற மிகப்பெரிய பொறுப்பு அவருக்கு இருந்தது.இதற்காக சிறந்த பயிற்சியாளர்களை வைத்து பயிற்சிகள் எல்லாம் மேற்கொண்டு வந்தார்.

இந்த படத்தில் நடிக்க எல்லாவிதத்திலும் உற்சாகமாக இருந்த ஸ்ருதிஹாசனுக்கு தற்போது இப்படத்தை தவிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், இந்த படத்தின் கதையை அவருக்கு சரியாக கொடுக்கவில்லை. அதேபோல், அவருக்கான நேரத்தையும் படக்குழு ஒதுக்கித் தரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்ருதிஹாசன் தற்போது இந்தியில் ‘பேகன் ஹோகி தேரி’ என்ற படத்திலும், தனது அப்பா கமலுடன் ‘சபாஷ் நாயுடு’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடித்தக்கது.


Post your comment





Related News
பாப் பாடகியாகும் முன்னணி ஒல்லி வாரிசு நடிகை - யார் அது?
எப்படி இருந்த இந்த பிரபல நடிகை இப்படி ஆகிட்டாரே - புகைப்படம் உள்ளே.!
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
லண்டன் காதலர் குறித்த கேள்விக்கு ஸ்ருதியின் அதிரடி பதில்
இதனால் தான் காதலை மறைக்கிறாரா ஸ்ருதி?
சங்கமித்ராவில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு சோதனையா?
சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு விஜய் தான் காரணமா?
ஸ்ருதிஹாசனை மிகவும் மோசமாக வர்ணித்த பிரபலம்
இந்த படத்தில் முத்தக்காட்சிக்கு 18 டேக் வாங்கினாரா ஸ்ருதி?
என் உடம்பு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்- ஸ்ருதிஹாசன் பாய்ச்சல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions