திருமணம் செய்யும் எண்ணமில்லை, ஸ்ருதிஹாசன் தரும் அதிர்ச்சி

Bookmark and Share

திருமணம் செய்யும் எண்ணமில்லை, ஸ்ருதிஹாசன் தரும் அதிர்ச்சி

பிரிந்து வாழும் நட்சத்திரத் தம்பதியரான கமல்ஹாசன் - சரிகா ஆகியோரின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.

தற்போது விஜய்யுடன் புலி அஜித்துடன் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். அடுத்து சூர்யாவுடன் சிங்கம் 3 படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என அதிர்ச்சியான தகவல் ஒன்றை அளித்திருக்கிறார்.

“திருமணம் பற்றி நான் என்றைக்கும் சிந்தித்ததே இல்லை. விருப்பங்களும், ஆசைகளும் இருவருக்கிடையே வித்தியாசப்படும் போது அவர்களால் திருமண வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியாது. இதுதான் பின்னர் பிரிந்து போவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிடும். அதனால் நான் திருமணமே வேண்டாம் என்ற முடிவில்தான் இருக்கிறேன்,” என்று சொல்லியிருக்கிறார்.

ஸ்ருதிஹாசனின் இந்தப் பேச்சு அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும் அவருடைய அப்பா, அம்மா இருவரும் பிரிந்து வாழ்வது அவருக்குள் கவலையை ஏற்படுத்தியிருக்கும் என்றே யோசிக்கத் தோன்றுகிறது.

தற்போது கூட மும்பையில் தனி வீட்டில் தனிமையில்தான் ஸ்ருதிஹாசன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தனக்குத் தோன்றும் போது அப்பாவையும், அம்மாவையும் அவர் சந்திக்கிறார் என்றே சொல்கிறார்கள்.

பெற்றோர்களின் பிரிவு மகள்களின் மனதில் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அது நட்சத்திரமாக இருந்தாலும் சரி, சராசரி மனிதராக இருந்தாலும் சரி கவலைப்படாமல் இருக்க மாட்டார்கள்.


Post your comment





Related News
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
முக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா? - விஸ்வரூபம் 2
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions