ஸ்ருதி-நயன்தாரா-த்ரிஷாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த எமி ஜாக்சன்

Bookmark and Share

ஸ்ருதி-நயன்தாரா-த்ரிஷாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த எமி ஜாக்சன்

பிரபல ஆங்கில இணையதளம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகர், நடிகைகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டும் மிகவும் விரும்பப்படும் நடிகர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில், நடிகர் அஜித் குமார் முதலிடத்தை பிடித்தார். தற்போது, மிகவும் விரும்பப்படும் நடிகை பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

அதில், ‘மதராசபட்டணம்’, ‘ஐ’ உள்ளிட்ட படங்களில் நடித்த இங்கிலாந்து நடிகை எமி ஜாக்சன் முதலிடத்தை பிடித்துள்ளார். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘ஐ’ படம் பல்வேறு சாதனைகளை படைத்தது. படத்தில் இவரது நடிப்பும் பரவலாக பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து, இவருக்கு படவாய்ப்புகளும் குவியத்தொடங்கியுள்ளது. சென்ற வருடம் இந்த பட்டியலில் எமி ஜாக்சன் 3 இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் முதலிடத்தில் இருந்த ஸ்ருதிஹாசன் இந்த வருடம் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். மூன்றாவது இடத்தை சமந்தாவும், நான்காவது இடத்தை தமன்னாவும் பிடித்துள்ளனர்.

படவாய்ப்புகள் குவிந்தும், தனக்கென்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருந்தும் நயன்தாராவுக்கு இதில் 7-வது இடம் கிடைத்துள்ளது. கடந்த வருடத்தைவிட இந்த வருடம் அவருக்கு கொஞ்சம் முன்னேற்றம்தான். கடந்த வருடத்தில் நயன்தாரா 9-வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திரிஷாவுக்கு 11-வது இடம் கிடைத்துள்ளது. அதேபோல், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளான அனுஷ்கா-ஹன்சிகா ஆகியோருக்கு 6-10 ஆகிய இடங்கள் கிடைத்துள்ளது.

மிகவும் விருப்பப்படும் நடிகைகளின் முழு பட்டியல் பின்வருமாறு:-

1) எமி ஜாக்சன், 2) ஸ்ருதிஹாசன் 3) சமந்தா, 4) தமன்னா 5) தீபிகா பல்லிகல் 6) அனுஷ்கா 7) நயன்தாரா, 8) பிரதாயினி, 9) ஆண்ட்ரியா, 10) ஹன்சிகா, 11) திரிஷா, 12) காஜல் அகர்வால், 13) அம்ரியா தஸ்தூர், 14) கேத்ரினா தெரசா, 15) சாகித்யா ஜெகன்னாதன், 16) பிரியா ஆனந்த், 17) வேதிகா, 18) ரோச்செல்லி மரியா ராவ், 19) ராய் லட்சமி, 20) பார்வதி மேனன், 21) டாப்சி, 22) ஜனனி ஐயர், 23) அலிசா அப்துல்லா, 24) ஸ்ரீதிவ்யா, 25) சஞ்சிதா ஷெட்டி 


Post your comment





Related News
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா? பிரபல நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
ரசிகர்களை கடும் அப்செட்டாக்கிய பிரபல முன்னணி நடிகையின் படு கவர்ச்சி புகைப்படங்கள்
இதை தடுத்து நிறுத்த வேண்டும், தயவு செய்து உதவுங்கள் - எமியை கலங்க வைத்த புகைப்படம்.!
இன்று எனக்கு ஸ்பெஷல் இரவு, எமி சொல்றத என்னனு பாருங்க - புகைப்படம் உள்ளே.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் சினிமாவுக்கு குட் பாய், பிரபல முன்னணி கவர்ச்சி நாயகி திடீர் முடிவு – சோகத்தில் ரசிகர்கள்.!
சீரியலிலும் கவர்ச்சி காட்ட வரும் பிரபல நடிகை - யார் அது?
PETA-விற்கு ஆதரவாக சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்ஸன்- போட்டோ உள்ளே
ஷங்கருக்கு ஏற்பட்ட பெரும் தலைவலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions