அப்பா பின் வாங்க மாட்டார் - ஸ்ருதிஹாசன்

Bookmark and Share

அப்பா பின் வாங்க மாட்டார் - ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஒவ்வொரு படங்களுமே சோதனை முயற்சியான படங்கள்தான். அதில் சில படங்கள் சாதனைப் படங்களாக அமைகின்றன. சில படங்கள் சோதிக்கும் படங்களாக அமைந்து விடுகின்றன.

தனது ஒவ்வொரு படத்திலும் தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு செல்ல கமல்ஹாசன் முயற்சிக்கிறார். ஆனால், அவை கமர்ஷியலாக சில சமயங்களில் பெரிய வெற்றியைப் பெறாமலே போய் விடுகிறது.

'உத்தம வில்லன்' படத்தைப் பொறுத்தவரையில் அற்புதமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கமல்ஹாசனின் நடிப்பை ரசிகர்களும் பாராட்டித் தள்ளி வருகிறார்கள்.

ஆனாலும், எதிர்பார்த்த அளவிற்கு அபரிமிதமான வசூல் இல்லை என கோலிவுட்டில் சொல்கிறார்கள். படத்தை சொன்னபடி மே 1ம் தேதி கொண்டு வந்திருந்தால் பெரிய வசூல் கிடைத்திருக்கும் என்கிறார்கள்.

இருந்தாலும் வெளிநாடுகளில் இப்படம் அமோக வசூலை அள்ளி வருகிறது. இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன், “என்னுடைய அப்பா எப்போதுமே சோதனை முயற்சிகளிலிருந்து பின் வாங்க மாட்டார்.

வித்தியாசமான படங்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டுதானிருப்பார்,” எனக் கூறியிருக்கிறார். சோதனைகளெல்லாம் சரி, அதே சமயம் அவற்றை விட சாதனைகள் அதிகம் வரும்படி கமல்ஹாசன் படங்களைக் கொடுத்தார் அவர் படங்களின் வியாபாரமும் புதுப்புது சாதனைகளை படைக்கும். 


Post your comment





Related News
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்காத அந்த வார்த்தை! சொன்னால் என்னாகும் தெரியுமா
நடிகர்-நடிகைகளின் முகப்பு படங்களை வைத்து அவதூறு பரப்புவதா?: சுருதிஹாசன் கண்டனம்
தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 ஸ்ருதிஹாசன் தான்- சாதனை
சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி
என்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள்: சுருதிஹாசன்
சுருதிஹாசன் நண்பரை லண்டனில் சந்தித்த கமல்
பத்திரிக்கையாளர்களிடம் தேவையில்லாமல் எரிச்சலடைந்த ஸ்ருதிஹாசன்
அவர்கள் தைரியம் இல்லாதவர்கள்- ஸ்ருதி விளாசல்
சிங்கம் 3 படத்தில் சூர்யாவின் வேட்டை எப்போது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions