வெட்டி பேச்சை குறைத்த ஸ்ருதிஹாசன்!

Bookmark and Share

வெட்டி பேச்சை குறைத்த ஸ்ருதிஹாசன்!

சினிமா உலகைப்பொறுத்தவரை படப்பிடிப்பு தளங்களுக்கு சென்றால் டைரக்டர், கேமராமேன், உதவி இயக்குனர்கள் குழுதான் அரக்க பரக்க வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

மற்றபடி நடிகர் நடிகைகளைப் பொறுத்தவரை ஹாயாக உட்கார்ந்து அரட்டியடித்துக்கொண்டிருப்பார்கள். அல்லது சீட்டு விளையாடுவார்கள். ஆனால், சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் படப்பிடிப்பு தளங்களில் வெட்டியாக பேசி வந்த ஸ்ருதிஹாசன், இப்போது தேவையில்லாமல் யாரிடமும் பேசுவதில்லை.

மாறாக, எந்த நேரமும் காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பாடல்களை கேட்டு ரசித்துக்கொண்டேயிருக்கிறாராம். அப்படி அவர் கேட்பது கஜல், இந்துஸ்தானி பாடல்களாக உள்ளதாம்.

சின்ன வயதில் இருந்தே இந்த மாதிரி இசையைத்தான் அதிகமாக கேட்டு வளர்ந்தவராம் ஸ்ருதிஹாசன். அதனால் இப்போது யாராவது பிரபலங்களின் புதிய ஆல்பங்கள் மார்க்கெட்டிற்கு வந்து விட்டது என்று தெரிந்தால் அதை முதல் நபராக வாங்கி கேட்டு ரசிக்கும் ரசிகையாகவே இருக்கும் ஸ்ருதிஹாசனுக்கு, இப்போதைக்கு நடிப்பே முழுநேர தொழிலாகி விட்டபோதும், எதிர்காலத்தில் மீண்டும் இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற பெரிய திட்டமும் மனதளவில் உள்ளதாம்.


Post your comment





Related News
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்காத அந்த வார்த்தை! சொன்னால் என்னாகும் தெரியுமா
நடிகர்-நடிகைகளின் முகப்பு படங்களை வைத்து அவதூறு பரப்புவதா?: சுருதிஹாசன் கண்டனம்
தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 ஸ்ருதிஹாசன் தான்- சாதனை
சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி
என்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள்: சுருதிஹாசன்
சுருதிஹாசன் நண்பரை லண்டனில் சந்தித்த கமல்
பத்திரிக்கையாளர்களிடம் தேவையில்லாமல் எரிச்சலடைந்த ஸ்ருதிஹாசன்
அவர்கள் தைரியம் இல்லாதவர்கள்- ஸ்ருதி விளாசல்
சிங்கம் 3 படத்தில் சூர்யாவின் வேட்டை எப்போது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions