நிஜ வாழ்க்கையிலும் கிராமத்தை தத்தெடுத்து வளமாக்குவேன்: ஸ்ருதிஹாசன் உறுதி

Bookmark and Share

நிஜ வாழ்க்கையிலும் கிராமத்தை தத்தெடுத்து வளமாக்குவேன்: ஸ்ருதிஹாசன் உறுதி

ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த வாரம் தெலுங்கில் வெளிவந்த ‘ஸ்ரீமந்துடு’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் தமிழிலும் ‘செல்வந்தன்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

இந்த படம் வளமிழந்த கிராமத்தை தத்து எடுத்து அதை வளமாக்குவதுபோல் படமாக்கப்பட்டிருந்தது. இதில் ஸ்ருதிஹாசன் கிராமத்தை மேம்படுத்துவது சம்பந்தமான படிப்பை படிக்கும் மாணவியாக வருவார்.

இந்த படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரத்தைப்போல் நிஜவாழ்க்கையிலும் கிராமத்தை தத்தெடுத்து வளமாக்கும் எண்ணம் உண்டா? என்று டுவிட்டரில் கேள்வி கேட்ட ரசிகருக்கு, உறுதியாக செய்வேன் என்று ஸ்ருதி கூறியுள்ளார்.

மேலும் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் கூறும்போது, என்னுடைய அப்பாவிடமிருந்து முழு கவனத்தையும், உறுதியையும் கற்றுக் கொண்டுள்ளேன். இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

எனது தங்கை அக்ஷராஹாசனை பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், அவள் எல்லோருக்கும் பிடித்தமானவள். சொந்தமாக மியூசிக் ஆல்பம் ஒன்றை வெளியிடும் திட்டம் உள்ளது என்றார்.

மேலும், தனக்கு பிடித்தமான சுற்றுலா தளம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் என்றும், தனக்கு பிடித்தமான உணவு சாம்பார் சாதம் என்றும் ரசிகர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் கூறினார். ஸ்ருதிஹாசன் தற்போது தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘புலி’ படத்திலும், அஜித்துக்கு ஜோடியாக பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்காத அந்த வார்த்தை! சொன்னால் என்னாகும் தெரியுமா
நடிகர்-நடிகைகளின் முகப்பு படங்களை வைத்து அவதூறு பரப்புவதா?: சுருதிஹாசன் கண்டனம்
தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 ஸ்ருதிஹாசன் தான்- சாதனை
சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி
என்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள்: சுருதிஹாசன்
சுருதிஹாசன் நண்பரை லண்டனில் சந்தித்த கமல்
பத்திரிக்கையாளர்களிடம் தேவையில்லாமல் எரிச்சலடைந்த ஸ்ருதிஹாசன்
அவர்கள் தைரியம் இல்லாதவர்கள்- ஸ்ருதி விளாசல்
சிங்கம் 3 படத்தில் சூர்யாவின் வேட்டை எப்போது தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions