ஸ்ருதி – காஜல் போட்டி!

Bookmark and Share

ஸ்ருதி – காஜல் போட்டி!

திரைக்குப்பின்னால் நடிகைகளுக்கிடையே படவாய்ப்பு பெறுவதற்கு  களேபரமே நடப்பது சகஜம். அந்த வகையில், சில நடிகைகள் டைரக்டர்களுடன் இன்னும் சிலர் ஹீரோக்களிடம்  நட்பு வளர்ப்பார்கள்.

அண்மையில் புதிய படங்களை கைப்பற்றுவதில் பெரிய போரே நடந்து கொண்டிருக்கிறது.  இதில், தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்த சமந்தாவுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் இருவருக்குமிடையே  படங்களை கைப்பற்றுவதில் பெரும் போட்டி நிலவியது.  

ஆனால் இப்போது சமந்தா தமிழுக்கு வந்து விட்டதால் அவருக்கு பதிலாக  காஜல்அகர்வால்  அவருக்கு போட்டி நடிகையாகியிருக்கிறார். அங்குள்ள பிரபல ஹீரோக்களை அடிக்கடி சந்தித்து சான்ஸ் கேட்டு வந்த காஜல்அகர்வால், ஸ்ருதிஹாசனுக்கு செல்லயிருந்த பவன் கல்யாணின் படம் ஒன்றை குறைந்த சம்பளம் பேசி தன் பக்கம் இழுத்து விட்டாராம்.  

இதனால் ஸ்ருதி அந்த நிறுவனத்துக்கு போன் போட்டு, எனக்குத்தான் அந்த படவாய்ப்பு என்று சொல்லி கடைசி நேரத்தில் வேறு நடிகையை புக் செய்து  என்னை டீலில் விட்டு விட்டீர்களே என்றும் புலம்பினாராம் ஸ்ருதிஹாசன்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions