நீதிமன்ற தடையை மீறி நடிக்கிறாராம் ஸ்ருதிஹாசன்!

Bookmark and Share

நீதிமன்ற தடையை மீறி நடிக்கிறாராம் ஸ்ருதிஹாசன்!

பிவிபி நிறுவனம் தமிழ், தெலுங்கில் நாகார்ஜூனா-கார்த்தியை வைத்து தயாரித்து வரும் படத்தில் கமிட்டாகி நடித்து வந்த ஸ்ருதிஹாசன், திடீரென்று அப்படத்தில் இருந்து விலகினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்நிறுவனம் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதையடுத்து தொடர்ந்து ஸ்ருதிஹாசன் நடிப்பதற்கு தடை விதித்துள்ளது நீதிமன்றம்.

இந்நிலையில், தற்போது நீதிமன்றம் விதித்திருக்கும் தடையை மீறி சில படங்களில் ஸ்ருதிஹாசன் சத்தமில்லாமல் நடித்துக்கொண்டிருப்பதாக பிவிபி நிறுவனம் சார்பில் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

ஆனால் இதற்கு ஸ்ருதிஹாசன் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் இதுவரை வெளியிடப்படவில்லை. மாறாக, தற்போது விஜய்யுடன் அவர் நடித்து வரும் புலி பட தரப்பில் இருந்து ஸ்ருதிஹாசனுக்கு சாதகமான பதில் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், ஸ்ருதி தற்போது எங்களது புலி படத்தில்தான் நடிக்கிறார். இது அவர் எப்போதோ ஒத்துக்கொண்டு நடித்து வரும் படம். அதனால் இந்த தடை உத்தரவுக்கும், எங்கள் படத்தில் அவர் நடிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.

மேலும், தடையை மீறி ஸ்ருதிஹாசன் வேறு ஏதேனும் புதிய படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறாரா? என்பதையும் பிவிபி நிறுவனம் சார்பில் உன்னிப்பாக கவனித்து வருகிறார்களாம்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions