நல்ல கதாபாத்திரம் கிடைத்ததற்கு சூர்யாவுக்கு நன்றி- ஸ்ருதிஹாசன்!

Bookmark and Share

நல்ல கதாபாத்திரம் கிடைத்ததற்கு சூர்யாவுக்கு நன்றி- ஸ்ருதிஹாசன்!

தமிழில் சூர்யாவுடன் ஏழாம் அறிவு படத்தின் மேலம் அறிமுகமானார். ஸ்ருதிஹாசன். அதோடு முதல் படத்திலேயே இன்னொரு ஹீரோ போன்ற கதாபாத்திரத்தில் நடித்தார் ஸ்ருதி.

அதையடுத்து தமிழில் முன்னணி நடிகையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, சில படங்களில் நடித்து விட்டு இந்தி, தெலுங்கு என்று பிசியாகி விட்டார் அவர்.
மீண்டும் தற்போது ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமா மீது தனது கவனத்தை திருப்பியுள்ளார்.

தெலுங்கு, இந்தி படங்கள் கைவசம் இருந்தாலும், தமிழிப்படங்களுக்கு போக மீதமிருக்கும் கால்சீட்டையே மற்ற மொழிகளுக்கு கொடுக்கிறார். மேலும், பூஜை படத்துக்கு பிறகு விஜய்யின் புலி, அஜீத்தின் 56வது படங்களில் நடிக்கும் ஸ்ருதி, மீண்டும் சூர்யாவுடன் சிங்கம்-3யில் நடிக்கவுள்ளார்.

இப்டத்திலும் ஏற்கனவே சூர்யாவுடன் நடித்த ஏழாம் அறிவு படத்தைப் போல ஸ்ருதிக்கு பேசக் கூடிய வேடம்தானாம். டைரக்டர் ஹரி கதையை சொன்னபோது அந்த கதை ஸ்ருதிக்கு அதிகமாக பிடித்து விட, உடனே கால்சீட் கொடுத்த அவர், இது குறித்து, “ சூர்யா படங்கள் என்றாலே எனக்கு முக்கியமான கதாபாத்திரங்கள் கிடைக்கிறது. 

அவரும் தனது படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்போது அதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத நல்ல நடிகராக இருக்கிறார். அதனால் இரண்டாவது முறையும் அவர் படத்தில் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் கிடைத்திருப்பதற்கு அவருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்” என்கிறார் ஸ்ருதிஹாசன்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions