ஜீவா படத்தில் சிபிராஜ்-க்கு அதிகபட்ச சம்பளம் 53 லட்சம்

Bookmark and Share

ஜீவா படத்தில் சிபிராஜ்-க்கு அதிகபட்ச சம்பளம் 53 லட்சம்

முன்னணி ஹீரோவாக வர முடியாமல் பல வருடங்களாகவே போராடிக் கொண்டிருக்கிறார் சத்யராஜின் மகனான சிபிராஜ் கதாநாயகனாக அறிமுகமான ஸ்டூடண்ட் நம்பர் ஒன் தொடங்கி சிபி நடித்த எந்தப்படமும் வணிக ரீதியிலான வெற்றியடையவில்லை.

சில படங்களில் சிபிக்கு பலமாக அவரிடைய அப்பா சத்யராஜ் நடித்தும் கூட வெற்றிபெறவில்லை. இதனால் பல வருடங்கள் வீட்டில் உட்கார்ந்திருந்து சிபிராஜ், நாய்கள் ஜாக்கிரதை என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நடித்தார். 

சிபிராஜ் மட்டுமல்ல, அந்தப் படத்தில் ரோல் ஹீரோவாக நடித்த நாய் கூட எதிர்பார்த்திராத வகையில் நாய்கள் ஜாக்கிரதை படம் வெற்றியடைந்தது.

ஒரு கோடி கொடுத்து தமிழக ஏரியாவை வாங்கிய விநியோகஸ்தருக்கு நான்கரை கோடி லாபம். நாய்கள் ஜாக்கிரதை படத்தை அடுத்து தற்போது ஜாக்சன் துரை என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் சிபி. இந்தப் படத்தில் அவருக்கு 25 லட்சம் சம்பளம்!

புலி படத்தை தயாரித்த பி.டி.செல்வகுமார் ஜீவாவை வைத்து போக்கிரிராஜா என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் ஜீவா உடன் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார் சிபிராஜ். இந்தப் படத்தில் சிபிக்கு 53 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. சிபிராஜின் கேரியரிலேயே அவர் வாங்கிய அதிகபட்ச சம்பளம் இதுதான்.


Post your comment





Related News
சிபிராஜால் விஜய் மீது கோபமான சத்தியராஜ் - ஏன்? என்னாச்சு தெரியுமா?
கமலை தொடர்ந்து ரஜினி பட டைட்டிலில் நடிக்கும் சிபிராஜ் - பர்ஸ்ட் லுக் இதோ.!
லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்காததற்குக் காரணம் என் மகன்தான்: சிபிராஜ் பேச்சு
கமலுக்கு பெருமை சேர்க்கும் படமாக சத்யா இருக்கும் - சத்யராஜ்
`சத்யா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிபிராஜின் `சத்யா' ரிலீஸ் தேதி அறிவிப்பு
மெர்சல் குறித்து சிபிராஜ் கூறியதை உற்று கவனித்தீர்களா?
லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ் ! ஏன் தெரியுமா
சத்யராஜின் "கணக்கை" முடக்கிய ஃபேஸ்புக்: காரணம் மகன் சிபி
மீண்டும் ரஜினி தலைப்பை கைப்பற்றிய சிபிராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions