சிபி ராஜுக்கு ஜோடியாகும் ரம்யா நம்பீசன்

Bookmark and Share

சிபி ராஜுக்கு ஜோடியாகும் ரம்யா நம்பீசன்

சிபிராஜ் நடிப்பில் தற்போது ‘கட்டப்பாவ காணோம்’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில், சிபிராஜ் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு கொடுத்துள்ளார். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சைத்தான்’ படத்தின் இயக்குனர்.

இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ரம்யா நம்பீசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘சேதுபதி’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இவர் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த ‘புலிமுருகன்’ படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் காமெடி நடிகர் சதீஷும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘ஷனம்’ படத்தின் ரீமேக் ஆகும். நாதாம்பாள் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions