தெலுங்கு பட ரீமேக்கில் நடிக்கும் சிபிராஜ்!

Bookmark and Share

 தெலுங்கு பட ரீமேக்கில் நடிக்கும் சிபிராஜ்!

சிபிராஜ் 'நாணயம்' படத்திற்கு பிறகு 4 ஆண்டுகளாக படங்களே இல்லாமல் இருந்து வந்தார். பின்னர் 'நாய்கள் ஜாக்கிரதை' என்ற படத்தை தயாரித்து நடித்தார்.

இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து ஜீவா நடித்த 'போக்கிரி ராஜா' படத்தில் கூலிங் கிளாஸ் குணா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். இது ஹீரோவாக நடித்த ஜீவாவை விட பேசப்படும் கதாபாத்திரமாக அமைந்தது. 

தற்போது 'ஜாக்சன்துரை' என்ற திகில் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் சிபிராஜூடன் சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், பிந்துமாதவி என பலர் நடித்துள்ளனர். 

இப்படம் ரிலீசாவதற்கு முன்பே அடுத்த படத்தை தொடங்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் சிபிராஜ். ஏற்கனவே, தமிழில் பல கதைகள் கேட்டு வைத்திருந்தபோதும், தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'ஷணம்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறார்.

இந்த படத்தில் சிபிராஜே நடிக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
சிபிராஜால் விஜய் மீது கோபமான சத்தியராஜ் - ஏன்? என்னாச்சு தெரியுமா?
கமலை தொடர்ந்து ரஜினி பட டைட்டிலில் நடிக்கும் சிபிராஜ் - பர்ஸ்ட் லுக் இதோ.!
லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்காததற்குக் காரணம் என் மகன்தான்: சிபிராஜ் பேச்சு
கமலுக்கு பெருமை சேர்க்கும் படமாக சத்யா இருக்கும் - சத்யராஜ்
`சத்யா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிபிராஜின் `சத்யா' ரிலீஸ் தேதி அறிவிப்பு
மெர்சல் குறித்து சிபிராஜ் கூறியதை உற்று கவனித்தீர்களா?
லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ் ! ஏன் தெரியுமா
சத்யராஜின் "கணக்கை" முடக்கிய ஃபேஸ்புக்: காரணம் மகன் சிபி
மீண்டும் ரஜினி தலைப்பை கைப்பற்றிய சிபிராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions