10 கிலோ எடையைக் குறைத்த சிபிராஜ்!

Bookmark and Share

10 கிலோ எடையைக் குறைத்த சிபிராஜ்!

2003 ஆம் வருடம் ஸ்டுடண்ட் நம்பர் ஒன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் சிபிராஜ். அதன் பிறகு சுமார் அரை டஜன் படங்களில் நடித்தும் அவர் க்ளிக்காவில்லை.

நாணயம் படத்துக்குப் பிறகு பட வாப்பில்லாமல் சுமார் நான்கு வருடங்கள் வீட்டில் இருந்த சிபிராஜ், துணிந்து தயாரிப்பிலும் இறங்கினார். நாய்கள் ஜாக்கிரதை என்ற படத்தை தானே தயாரித்து ஹீரோவாக நடித்தார்.

யாருமே எதிர்பாராதவகையில் அந்தப்படம் வணிக ரீதியிர்ல் பெரும் வெற்றியடைந்தது. நாய்கள் ஜாக்கிரதை படத்தை வாங்கி தமிழகம் முழுக்க வெளியிட்ட விநியோகஸ்தருக்கு சுமார் 5 கோடி லாபம் கிடைத்தது.

நாய்கள் ஜாக்கிரதை படத்தை அடுத்து ஜாக்சன் துரை என்ற படத்தில் நடிக்கிறார் சிபிராஜ். பர்மா என்ற படத்தை இயக்கிய தரணிதரன் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.

ஹாரர் படமாக உருவாகும் ஜாக்சன் துரை படத்தில் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த வேடத்துக்காக 10 கிலோ எடையைக் குறைத்திருக்கிறார் சிபிராஜ். ஜாக்சன் துரை படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ஹாரர் பட வரிசையில் பேய்கள் ஜாக்கிரதை
நாய்கள் ஜாக்கிரதை இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி
50 நாளை ஓடிக்கடந்த நாய்கள் ஜாக்கிரதை
நாய்கள் ஜாக்கிரதை 2-ம் பாகம் உருவாகிறது
நாய்கள் ஜாக்கிரதை படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் 2.5 கோடி
நாய்கள் ஜாக்கிரதை சக்சஸ் பார்ட்டியில் நாய்க்கு இடமில்லை!!
சென்னை பாக்ஸ் ஆபிஸ்
டைரக்டர்களை டென்சன் செய்த அருந்ததி!
நவம்பர் 21 திரைக்கு வருகிறது நாய்கள் ஜாக்கிரதை
வில்லியாக நடிக்கிறார் அருந்ததி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions