நடிகர் சங்க தேர்தலில் குதித்த சிம்பு, எஸ்.ஜே.சூர்யா

Bookmark and Share

நடிகர் சங்க தேர்தலில் குதித்த சிம்பு, எஸ்.ஜே.சூர்யா

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:- 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வளர்ச்சியில் கோவைக்கு முக்கிய பங்கு உண்டு. அதனால் கோவையில் புதிய சங்கத்தை தொடங்கி உள்ளனர். இதை தென்னிந்திய நடிகர் சங்கத்தோடு இணைக்க முடியுமா? என்று கேட்டனர்.

இப்போது முடியாது. தேர்தலுக்கு பிறகு இணைக்கலாம் என்று கூறினேன். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு எப்போது தேர்தல் என்பதை நீதிமன்றம் தான் அறிவிக்க வேண்டும். 

நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணி சார்பில் நடிகர்கள் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். தலைவர் பதவிக்கு சரத்குமாரும், பொதுச்செயலாளர் பதவிக்கு நானும் போட்டியிடுகிறோம்.

மற்ற நிர்வாகிகள் பதவிக்கு யார்? யார்? போட்டியிடுவது என்பது பின்னர் அறிவிக்கப்படும். கருணாநிதியின் ஓட்டு உரிமையை பறித்து விட்டதாக கூறுகிறார்கள். 

கருணாநிதி கவுரவ உறுப்பினர். அவருக்கு ஓட்டு உரிமை கிடையாது. ஆனால் அவருடைய ஓட்டு உரிமையை பறித்து விட்டதாக விஷால் குற்றம் சொல்கிறார்.

இதேபோல நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் குளறுபடி என்று விஷால் குற்றம் சாட்டுகிறார். அதுவும் தவறான தகவல். நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்துக்கு வராதவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. இவ்வாறு ராதாரவி பேசியுள்ளார்.


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions