போர்க்களம் சார்ந்த படத்திற்கு இசையமைக்கும் சித்தார்த் விபின்!

Bookmark and Share

போர்க்களம் சார்ந்த படத்திற்கு இசையமைக்கும் சித்தார்த் விபின்!

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘நான் பேய் பேசுகிறேன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தவர் சித்தார்த் விபின். இவருடைய இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தற்போது மோகன்லால் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

மேஜர் ரவி இயக்கும் மலையாள படத்தில் மோகன் லால் நடிக்க இருக்கிறார். ஏற்கெனவே மேஜர் ரவி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ‘குருஷேத்ரா’ என்ற மலையாள படத்திற்கு இசை அமைத்த சித்தார்த் விபின் மீண்டும் இப்படத்தில் மோகன்லால், மேஜர் ரவியுடன் இணைந்து பணியாற்றுகிறார். 

இப்படம் 1971-ல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்த போரின் பின்னணியை வைத்து உருவாக்கப்பட இருக்கிறது. இப்படத்தில் மோகன்லால் ராணுவ மேஜராக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்திய - பாகிஸ்தான் எல்லை பிரதேசங்களில் நடக்கவிருக்கிறது. 

ஏற்கெனவே மோகன் லால் நடிப்பில் ராணுவ பின்னணியில் மேஜர் ரவி இயக்கிய ‘கர்மயோதா’, ‘கீர்த்தி சக்ரா’, (தமிழ்- அரண்), ‘குருஷேத்ரா’ ஆகிய படங்களுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இப்படத்தையும் ராணுவ பின்னணியில் இயக்கி வருகிறார் மேஜர் ரவி.


Post your comment





Related News
அஜித், விஜய் பாவம், முட்டாள் ரசிகர்கள் பிரபல நடிகர் விளாசல் - புகைப்படத்தை பாருங்க.!
உன் மூஞ்சியெல்லாம் காசு கொடுத்து படம் பார்த்தா எனக்குதான் அசிங்கம் - கொந்தளித்த சித்தார்த்
அறம் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகர் - இயக்குனர் வெளியிட்ட அதிரடி தகவல்கள்.!
அறிவு இல்லாத தத்தி முண்டம் - சித்தார்த் யாரை இப்படி திட்டுறாரு பாருங்க.!
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அவள் இந்த வருடத்தில் சிறந்த ஹாரர் படமாக இருக்கும் - தயாரிப்பாளர் ரவீந்தரன் !
இந்தியாவே அவளைப் பார்த்து பயப்படும்: சித்தார்த்
நவம்பரில் வெளியாகும் சித்தார்த்தின் `அவள்'
குடியுரிமையின் கேவலம் இது, நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்- சித்தார்த் விளாசல்
ரசிகர்களின் செயலால் கடுப்பான சித்தார்த்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions