எங்களையும் பிழைக்க விடுங்கள்: கோரிக்கை வைத்த சித்தார்த்!

Bookmark and Share

எங்களையும் பிழைக்க விடுங்கள்: கோரிக்கை வைத்த சித்தார்த்!

அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் சேதுபதி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட நடிகர் சித்தார்த் பேசியதாவது, ” ஜிகர்தண்டா முடிந்ததும் அடுத்த என்ன படம் பண்ண போகிறோம் என கார்த்திக் சுப்புராஜிடம் கேட்டேன்.

அவர் விஜய் சேதுபதியுடன் படம் பண்ண போவதாக சொன்னார். பிறகு பண்ணையாரும் பத்மினியும் பார்த்ததும் அருண் குமார் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தேன்.
ஆனால் அவரும் விஜய் சேதுபதியை வைத்து இன்னொரு படம் பண்ண போவதாக சொன்னார்.

அதேபோல் சூது கவ்வும் பார்த்ததும் நலன் குமாரசாமியிடம் போய் பேசினேன். அவரும் விஜய் சேதுபதியுடன் அடுத்த படம் பண்ண போவதாக சொன்னார்.

இப்படி விஜய் சேதுபதி தனது இயக்குனர்களை வெளியே விடாமல் பார்த்துகொள்கிறார். அவர் நடிக்கும் ஓரிரு நல்ல படங்களை எங்களுக்கும் விட்டுக்கொடுத்தால் நாங்களும் பிழைத்துக் கொள்வோம்” என நடிகர் சித்தார்த், விஜய் சேதுபதியிடம் ஜாலியாக கோரிக்கை வைத்தார்.


Post your comment





Related News
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் - விஜய் சேதுபதி
விஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா
நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது - தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு
கல்விக்காக ரூ.50 லட்சம் வழங்கிய விஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டுக்கள்
இயக்குநர் நலன் குமாரசாமிக்கு திருமணம்: விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி நேரில் வாழ்த்து
அடுத்த கட்டத்தில் விஜய் சேதுபதியின் `ஜுங்கா'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions