இந்த ஆண்டில் அதிக படங்கள் ரிலீசாகும் முதல் வாரம்: 6ந் தேதி 13 படங்கள் வெளிவருகிறது

Bookmark and Share

இந்த ஆண்டில் அதிக படங்கள் ரிலீசாகும் முதல் வாரம்: 6ந் தேதி 13 படங்கள் வெளிவருகிறது

வருகிற 8ந் தேதி தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூடுகிறது. அதில் படங்கள் வெளியீட்டில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக பண்டிகை நாட்களில் மட்டுமே பெரிய படங்கள் வெளிவரவேண்டும்.

மற்ற வாரங்களில் சிறுபட்ஜெட் படங்கள் வெளிவரவேண்டும் என்கிற கட்டுப்பாடு கடுமையாக்கப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் வருகிற 6ந் தேதி வெள்ளிக்கிழமை 13 படங்கள் வெளிவருகிறது.

சித்தார்த் நடித்த எனக்குள் ஒருவன், ஆர்கே நடித்த என் வழி தனி வழி, சேரன் இயக்கியுள்ள ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை, ஆகியவை மட்டுமே பெரிய படங்கள். மகா மகா, கனல், ரொம்ப நல்லவண்டா நீ, இரவும் பகலும், தொப்பி, சேர்ந்து போலாமா, இஞ்சி மொரப்பா, ஆயா வடை சுட்ட கதை ஆகியவை சிறுபட்ஜெட் படங்கள்.

இதுதவிர சுதீப் நடித்த கன்னடப் படம் முரட்டு கைதி என்ற பெயரில் டப்பாகி வெளிவருகிறது. வில் கார்ட் என்ற ஹாலிவுட்  படமும் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது.

தமிழ் நாட்டில் மொத்தம் சுமார் 1200 தியேட்டர்கள் உள்ளன. இதில் ரிலீஸ் படங்களை திரையிடும் தியேட்டர்கள் சுமார் 700. இதில் எனக்குள் ஒருவன் 250 முதல் 300 தியேட்டர்களில் ரிலீசாகிறது.

மீதமுள்ள தியேட்டர்களைத்தான் 12 படங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு படமும் சராசரியாக 50 முதல் 100 தியேட்டர்களுக்குள்தான் வெளிவருகிறது.


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பையே கலாய்த்து தள்ளிய தமிழ் முன்னணி நடிகர்- எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா
பலாத்காரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை என்பதை கூறுவதுதான் தேசப்பற்று: நடிகர் சித்தார்த்
அடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை! நடிகர் சித்தார்த்
சித்தார்த் ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை!
டுவிட்டரில் சித்தார்த் கூறிய கருத்து யாருக்கு?
இரண்டாவது கட்ட நிவாரண பணியில் இறங்கிய RJ பாலாஜி, சித்தார்த்!
வெள்ள நிவாரணப் பணிகளில் மக்களைக் கவர்ந்த நடிகர்கள்!
படங்களை தூக்கி எறிந்த சித்தார்த் - மக்கள் பாராட்டு
நிவாரணப் பணிகளில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகிவிட்ட நடிகர் சித்தார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions