வெள்ளம் புகுந்ததால் மாடிகளில் தஞ்சம் அடந்த நடிகர்-நடிகைகள்!

Bookmark and Share

வெள்ளம் புகுந்ததால் மாடிகளில் தஞ்சம் அடந்த நடிகர்-நடிகைகள்!

சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து பல இடங்களில் வீடுகளின் இரண்டாவது மாடி வரை நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. இந்த வெள்ள பாதிப்புக்கு நடிகர்-நடிகைகளும் தப்பவில்லை.

கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம், வளசரவாக்கம், ஈக்காட்டுதாங்கல் பகுதிகளில்தான் நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர்.

அடையாறில் சீறிக்கொண்டு செல்லும் வெள்ளம் சைதாப்பேட்டையை மூழ்கடித்து தியாகராயநகர், கோடம்பாக்கம் பகுதிகளையும் புரட்டிப்போட்டது. 

நடிகர், நடிகைகள் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அவர்கள் வீட்டின் முதல் தளத்தை காலிசெய்து விட்டு மாடிகளில் தஞ்சம் அடைந்தனர். தேனாம்பேட்டை செனட்டாப் ரோடு பகுதியில் உள்ள நடிகை திரிஷா வீட்டை வெள்ளம் சூழ்ந்தது. அண்ணாநகரில் உள்ள விஷால் மற்றும் ஆர்யா வீடுகளிலும் வெள்ளம் புகுந்தது. 

நடிகர் சித்தார்த் தனது வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பெட்டி, படுக்கையுடன் மாடிக்கு சென்றார். வீட்டில் நுழைந்த மழை வெள்ளத்தை படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டார். அத்துடன் வாகனங்கள் ஏற்பாடு செய்து மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உணவு பொட்டலங்களும் வழங்கி வருகிறார்.  

‘என் வீட்டில் வெள்ளம் புகுந்துள்ளது. மாடிக்கு செல்கிறோம். தமிழ் நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று டுவிட்டரில் அவர் குறிப்பிட்டு உள்ளார். 


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பையே கலாய்த்து தள்ளிய தமிழ் முன்னணி நடிகர்- எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா
பலாத்காரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை என்பதை கூறுவதுதான் தேசப்பற்று: நடிகர் சித்தார்த்
அடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை! நடிகர் சித்தார்த்
சித்தார்த் ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை!
டுவிட்டரில் சித்தார்த் கூறிய கருத்து யாருக்கு?
இரண்டாவது கட்ட நிவாரண பணியில் இறங்கிய RJ பாலாஜி, சித்தார்த்!
வெள்ள நிவாரணப் பணிகளில் மக்களைக் கவர்ந்த நடிகர்கள்!
படங்களை தூக்கி எறிந்த சித்தார்த் - மக்கள் பாராட்டு
நிவாரணப் பணிகளில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகிவிட்ட நடிகர் சித்தார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions