நடிகர்களுக்கு சேவை வரிவிலக்கு: சித்தார்த் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

Bookmark and Share

நடிகர்களுக்கு சேவை வரிவிலக்கு: சித்தார்த் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

மத்திய அரசு திரைப்பட கலைஞர்களுக்கு சேவை வரி விதித்துள்ளது. ஆனால் நாடக கலைஞர்கள், கிராமிய கலைஞர்களுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளித்தது. இதையொட்டி திரைப்பட நடிகர்களுக்கும் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி நடிகர் சித்தார்த் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

"இயக்குனர்கள் சொல்வதை கேட்டுத்தான் நாங்கள் மேக்அப் போட்டு அவர்கள் சொல்கிறபடி நடிக்கிறோம். தொழில் முறையில் எங்களுக்கும் நாடக நடிகர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. எனவே நாடக நடிகர்கள், கிராமிய கலைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது போன்று எங்களுக்கும் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்" என்று கேட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வருமாறு: யாருக்கு வரி விதிக்க வேண்டும், விதிக்க கூடாது என்று முடிவெடுப்பது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. கிராமிய கலைஞர்கள் லாப நோக்கம் இல்லாமல் பாரம்பரிய கலைகளை பாதுகாத்து வருகிறார்கள்.

அதனால் அவர்களுக்கு அரசு விரிவிலக்கு அளித்துள்ளது. கிராமிய கலைஞர்களையும், திரைப்பட கலைஞர்களையும் ஒரே விதமாக கருத முடியாது. திரைப்படங்கள் பெரும் முதலீட்டில் தயாரிக்கப்படுகிறது.

நடிகர்கள் பெரும் தொகை சம்பளமாக பெறுகிறார்கள். எனவே நடிகர்கள் வரிவிலக்கு சலுகை கேட்க முடியாது. அதனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பையே கலாய்த்து தள்ளிய தமிழ் முன்னணி நடிகர்- எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா
பலாத்காரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை என்பதை கூறுவதுதான் தேசப்பற்று: நடிகர் சித்தார்த்
அடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை! நடிகர் சித்தார்த்
சித்தார்த் ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை!
டுவிட்டரில் சித்தார்த் கூறிய கருத்து யாருக்கு?
இரண்டாவது கட்ட நிவாரண பணியில் இறங்கிய RJ பாலாஜி, சித்தார்த்!
வெள்ள நிவாரணப் பணிகளில் மக்களைக் கவர்ந்த நடிகர்கள்!
படங்களை தூக்கி எறிந்த சித்தார்த் - மக்கள் பாராட்டு
நிவாரணப் பணிகளில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகிவிட்ட நடிகர் சித்தார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions