பர்சனல் விசயங்களை படமாக்க சொன்னாரா சித்தார்த்?

Bookmark and Share

பர்சனல் விசயங்களை படமாக்க சொன்னாரா சித்தார்த்?

சமந்தாவுடன் இணைத்து சில ஆண்டுகளாகவே காதல் கிசுகிசுவில் சிக்கி வந்தவர் சித்தார்த். ஆனால் அதுபற்றி அவரிடம் மீடியாக்கள் கேள்வி கேட்டபோது, என் பர்சனல் விசயத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்றும் பதில் கொடுத்து வந்தார்.

அதன்பிறகு, கடந்த சில மாதங்களாக சித்தார்த்தின் சொல்லை மீறி சில படங்களில் சமந்தா படுகவர்ச்சியாக நடித்தது அவருக்கு பிடிக்காததால், அவருடனான காதலை முறித்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், தற்போது சித்தார்த் இரண்டு வேடங்களில் நடித்து வெளியாகியிருக்கும் எனக்குள் ஒருவன் படத்தில் சினிமா ஸ்டாராக ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார் சித்தார்த்.

அப்போது சமந்தா போன்று ஒரு நடிகையை காதலிக்கிறார். இதுபற்றி ஒரு பிரஸ்மீட்டில், அந்த நடிகையுடனான காதலைப்பற்றி சித்தார்த்திடம் நிருபர்கள் கேள்வி கேட்கின்றனர்.

அதற்கு, எனது பர்சனல் வியத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்லி, கேள்வி கேட்ட நிருபரைப் பார்த்து கோபத்துடன் சாடுகிறார். அதையடுத்து கடைசியாக நீங்கள் நடித்த சில படங்கள் வசூல்ரீதியாக வெற்றி பெறவில்லையே? என்று கேட்கப்படும் கேள்விக்கு, அதெல்லாமே சுத்த பொய், என் படங்கள் எல்லாமே லாபம்தான் கொடுத்திருக்கின்றன.

எந்த தயாரிப்பாளராவது உங்களிடம் படத்தின் மொத்த வரவு செலவு கணக்கை காண்பித்து இப்படி சொல்லியிருக்கிறார்களா?. அவர்கள் பரப்பி விடும் செய்தியை நம்பித்தானே இப்படி கேட்கிறீர்கள் என்று பதில் கொடுத்தார்.

பின்னர், கதைப்படி அந்த நடிகையை எந்த படத்திலும் நடிக்க விடாமல் தடுப்பார் சித்தார்த். ஆனால் அவர் இவரை மீறி வேறு ஒரு நடிகருடன் ஒரு படத்தில் நடித்து விடுவார்.

இந்த விசயம் சித்தார்த்தின் காதுக்கு வரும்போது, அவரை விட்டு பிரிவார். அதன்பிறகு சமாதானமாகி விடுவார்கள் இதுதான் கதை. இப்படி எனக்குள் ஒருவன் படத்தில் சித்தார்த் நடித்த பல காட்சிகள் அவரது நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களாகவே உள்ளன.

அதனால், இது ஏற்கனவே அந்த கதையில் டைரக்டர் உருவாக்கின விசயங்களா? இல்லை, சித்தார்த்தே இதுபோன்ற காட்சிகளை வைக்குமாறு டைரக்டரை வற்புறுத்தினாரா? என்பது தெரியவில்லை.

ஆனால் சித்தார்த் வாழ்க்கையில் நடந்த விசயங்கள் அப்படியே படமாக்கப்பட்டிருப்பதால் இதுகுறித்து ஒரு பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. 


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பையே கலாய்த்து தள்ளிய தமிழ் முன்னணி நடிகர்- எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா
பலாத்காரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை என்பதை கூறுவதுதான் தேசப்பற்று: நடிகர் சித்தார்த்
அடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை! நடிகர் சித்தார்த்
சித்தார்த் ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை!
டுவிட்டரில் சித்தார்த் கூறிய கருத்து யாருக்கு?
இரண்டாவது கட்ட நிவாரண பணியில் இறங்கிய RJ பாலாஜி, சித்தார்த்!
வெள்ள நிவாரணப் பணிகளில் மக்களைக் கவர்ந்த நடிகர்கள்!
படங்களை தூக்கி எறிந்த சித்தார்த் - மக்கள் பாராட்டு
நிவாரணப் பணிகளில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகிவிட்ட நடிகர் சித்தார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions