கதை ரெடி பண்ணும் சித்தார்த்!

Bookmark and Share

கதை ரெடி பண்ணும் சித்தார்த்!

கமல் எப்படி இயக்குனராக வேண்டும் என்று சினிமாவிற்குள் வந்து நடிகரானாரோ அதே மாதிரிதான் சித்தார்த்தும், இயக்குனராக வேண்டும் என்று மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

அப்போதுதான் பாய்ஸ் படத்தை இயக்கிய ஷங்கர் அவரை அந்த படத்தின் ஹீரோவாக்கினார். அதன்பிறகு தொடர்ந்து படவாய்ப்புகள் வந்ததால் தனது இயக்குனர் ஆசையை ஓரங்கட்டி வைத்து விட்டு முழுநேர நடிகரானார்.

ஒருகட்டத்தில் தமிழை தள்ளி வைத்து விட்டு தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்த சித்தார்த், சமீபகாலமாக மீண்டும் தமிழுக்கு வந்து நடித்து வருகிறார். அந்த வகையில், காதலில் சொதப்புவது எப்படி என்றொரு படத்தை தயாரித்து நடித்த சித்தார்த்துக்கு வெற்றி கிடைத்தது.

அதனால் பின்னர் உதயம் என்எச்4, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத்தலைவன், எனக்குள் ஒருவன் ஆகிய படங்களில் வரிசையாக நடித்தார். இதில் அவர் அதிகமாக எதிர்பார்த்த ஜிகர்தண்டா அவருக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. மாறாக, தன்னை ஆக்சன் ஹீரோவாக அப்படம் நிறுத்தும் என்று எதிர்பார்த்திருந்த சித்தார்த்துக்கு பதிலாக அப்படத்தின் வில்லனாக பாபி சிம்ஹாவை அப்படம் பேச வைத்தது.

அதன்பிறகு காவியத்தலைவன், எனக்குள் ஒருவன் படங்களும் அடுத்தடுத்து தோல்விகளாக அமைந்ததால் பெருங்குழப்பத்தில் இருக்கிறார் சித்தார்த்.முக்கியமாக, தனக்குள் இருக்கும் இயக்குனரை இந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தலாமா? என்று யோசித்து வருகிறாராம்.

அதனால் ஏற்கனவே சில கதைகளை ரெடி பண்ணி வைத்திருந்த சித்தார்த், இப்போது அந்த கதைகளை இன்றைய பாணியில் சில திருத்தங்கள் செய்து மாற்றிக்கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆக, எப்போது வேண்டுமானாலும் சித்தார்த்துக்குள் இருக்கிற இயக்குனர் வெளியில் எகிறி குதிக்கலாம் என்று தெரிகிறது.


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பையே கலாய்த்து தள்ளிய தமிழ் முன்னணி நடிகர்- எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா
பலாத்காரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை என்பதை கூறுவதுதான் தேசப்பற்று: நடிகர் சித்தார்த்
அடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை! நடிகர் சித்தார்த்
சித்தார்த் ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை!
டுவிட்டரில் சித்தார்த் கூறிய கருத்து யாருக்கு?
இரண்டாவது கட்ட நிவாரண பணியில் இறங்கிய RJ பாலாஜி, சித்தார்த்!
வெள்ள நிவாரணப் பணிகளில் மக்களைக் கவர்ந்த நடிகர்கள்!
படங்களை தூக்கி எறிந்த சித்தார்த் - மக்கள் பாராட்டு
நிவாரணப் பணிகளில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகிவிட்ட நடிகர் சித்தார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions