சித்தார்த்தின் ஹன்சிகா சென்டிமென்ட்!

Bookmark and Share

சித்தார்த்தின் ஹன்சிகா சென்டிமென்ட்!

காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களின் வெற்றிக்கு பிறகு நடித்த ஜிகர்தண்டா, காவியத்தலைவன், எனக்குள் ஒருவன் ஆகிய படங்கள் சித்தார்த்துக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

அதிலும் ஜிகர்தண்டா வெற்றி பெற்றபோதும் அந்த வெற்றி பாபி சிம்ஹாவுக்கே சென்று விட்டது.

அதனால் பெரிசாக எதிர்பார்த்த படம் ஏமாற்றி விட்டதே என்று பீல் பண்ணிக்கொண்டிருந்த சித்தார்த், இப்போதும் தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்கு பிறகு மீண்டும் சுந்தர்.சியின் அரண்மனை-2வில் நடிப்பதால் கொஞ்சம் உற்சாகமாகியிருக்கிறார்.

காரணம், அந்த படத்திலும் ஹன்சிகா நடிப்பதுதான். ஏனென்றால் தெலுங்கில் ஹன்சிகாவுடன் நடித்த படம் சித்தார்த்துக்கு ஹிட்டாக அமைந்தது போன்று, தமிழில் அவருடன் நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படமும் ஹிட்டாக அமைந்தது.

அதனால் அடுத்தபடியாக ஈராஸ் இன்டர்நேசனல் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கயிருக்கும் சித்தார்த், அந்த படத்தில் நடிப்பதற்கும் ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்யுமாறு சிபாரிசு செய்திருக்கிறாராம்.


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பையே கலாய்த்து தள்ளிய தமிழ் முன்னணி நடிகர்- எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா
பலாத்காரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை என்பதை கூறுவதுதான் தேசப்பற்று: நடிகர் சித்தார்த்
அடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை! நடிகர் சித்தார்த்
சித்தார்த் ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை!
டுவிட்டரில் சித்தார்த் கூறிய கருத்து யாருக்கு?
இரண்டாவது கட்ட நிவாரண பணியில் இறங்கிய RJ பாலாஜி, சித்தார்த்!
வெள்ள நிவாரணப் பணிகளில் மக்களைக் கவர்ந்த நடிகர்கள்!
படங்களை தூக்கி எறிந்த சித்தார்த் - மக்கள் பாராட்டு
நிவாரணப் பணிகளில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகிவிட்ட நடிகர் சித்தார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions