கலகலப்பான கதை தேடும் சித்தார்த்!

Bookmark and Share

கலகலப்பான கதை தேடும் சித்தார்த்!

சின்ன வயதில் இருந்தே கமலின் தீவிரமான ரசிகர் சித்தார்த். அதோடு கமல் எப்படி சினிமாவில் இயக்குனராக வரவேண்டும் என்று ஆரம்ப காலத்தில் முயற்சி எடுத்தாரோ, அதேபோல்தான் சித்தார்த்தும் இயக்குனராக வேண்டும் என்று வந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக பாய்ஸ் படத்திற்கு முன்பு டைரக்டர் ஷங்கரின் கண்ணில் பட்டதால் ஹீரோவாகிவிட்டார்.

அந்த வகையில், தமிழ், தெலுங்கு, இந்தி சினிமா வரை நடித்து விட்ட சித்தார்த், தன்னைத்தானே இயக்க வேண்டும் என்று ஏற்கனவே சில ஸ்கிரிப்டுகள் ரெடி பண்ணி வைத்திருக்கிறார். அதோடு காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தை தயாரித்து நடித்தபோதே, எனக்குள் இருக்கும் இயக்குனர் எப்போது வேண்டுமானாலும் வெளியே வருவார் என்றுகூட சூசகமாக சொன்னார் அவர்.

ஆனால், அதையடுத்து, ஜிகர்தண்டா, காவியத்தலைவன் என சில படங்கள் கமிட்டானபோது. தன்னை வித்தியாசப்படுத்தும் கதைகள் கிடைத்து விட்டதாக கருதி, இயக்குனராக வேண்டும் என்ற ஆசைக்கு தற்காலிமாக விடுப்பு கொடுத்து விட்டு அந்த படங்களில் அதிக ஈடுபாடு காட்டி நடித்தார் சித்தார்த்.

ஆனால் அப்படி அவர் நடித்த இரண்டு படங்களுமே அவரை ஏமாற்றி விட்டன. அதேபோல், கன்னட லூசியா படத்தின் ரீமேக்கான எனக்குள் ஒருவன் படத்தை அந்த படங்களைவிட அதிகமாக எதிர்பார்த்தார்.

ஆனால் கன்னடத்தில் வெற்றி பெற்ற அப்படம் தமிழில் வெற்றிபெறவில்லை. அதனால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டு உறைந்து போயிருக்கும் சித்தார்த், அடுத்தபடியாக பக்கா கமர்சியல் கதையாக தேடி வருகிறார்.

சுந்தர்.சியின் தீயா வேலை செய்யனும் குமாரு படம் மாதிரி கலகலப்பான கதைகள்தான் கியாரண்டியானவை என்று கூறும் சித்தார்த், அந்த மாதிரி கதை வைத்திருக்கும் இயக்குனர்களுக்கும் அழைப்பு விடுத்து வருகிறார்.


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பையே கலாய்த்து தள்ளிய தமிழ் முன்னணி நடிகர்- எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா
பலாத்காரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை என்பதை கூறுவதுதான் தேசப்பற்று: நடிகர் சித்தார்த்
அடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை! நடிகர் சித்தார்த்
சித்தார்த் ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை!
டுவிட்டரில் சித்தார்த் கூறிய கருத்து யாருக்கு?
இரண்டாவது கட்ட நிவாரண பணியில் இறங்கிய RJ பாலாஜி, சித்தார்த்!
வெள்ள நிவாரணப் பணிகளில் மக்களைக் கவர்ந்த நடிகர்கள்!
படங்களை தூக்கி எறிந்த சித்தார்த் - மக்கள் பாராட்டு
நிவாரணப் பணிகளில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகிவிட்ட நடிகர் சித்தார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions