கல்யாணப்பேச்செடுத்தால் காமெடி பண்ணும் ஹீரோ!

Bookmark and Share

கல்யாணப்பேச்செடுத்தால் காமெடி பண்ணும் ஹீரோ!

நடிகர் சித்தார்த்தும் நடிகை சமந்தாவும் கடந்த சில வருடங்களாக சின்சியராக காதலித்து வந்தனர். விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் தகவல் அடிபட்டது. அதை உண்மையாக்குவதுபோல் சித்தார்த்தும், சமந்தாவும் தங்களுடைய பெற்றோர்களுடன் ஆந்திராவில் உள்ள காளஹஸ்த்தி கோவிலுக்கு சென்று வந்தனர்.

திருமண தோஷம் கழிப்பதற்காக சென்றதாகவும், அது குறித்த சடங்குகள் முடிவடைந்த பிறகு திருமணம் செய்யவிருப்பதாக அப்போது பரபரப்பான செய்திகள் வெளியாகின.

நாட்கள் ஓடியதே தவிர, சித்தார்த் சமந்தா திருமண விஷயத்தில் முன்னேற்றமில்லை. இந்நிலையில் இருவருக்கும் காதல் முறிந்துவிட்டதாகவும்... சமந்தாவின் பார்வை த்ரிஷாவின் முன்னாள் காதலரான ராணா மீது திரும்பிவிட்டதாகவும் ஆந்திர மீடியாக்களில் கிசுகிசு வெளியானது.

அந்த செய்தியை சித்தார்த் மட்டுமல்ல, சமந்தா, ராணா கூட மறுக்கவில்லை. இப்படியொரு சூழலில் எனக்குள் ஒருவன் படத்தின் புரமோஷனுக்காக தமிழ் மீடியாக்களை சந்தித்தார் சித்தார்த்.

அப்போது அவரது திருமணம் குறித்து கேட்டபோது, இந்தியா வேர்ல்ட் கப் வின் பண்ணின அடுத்த நாளே என் கல்யாணத்தை அறிவிக்கிறேன் என்று காமெடி பண்ணினார். அதன் அர்த்தம் என்ன? இந்தியா உலக கோப்பையை வெல்லாது என்று நினைக்கிறாரா சித்தார்த்?


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பையே கலாய்த்து தள்ளிய தமிழ் முன்னணி நடிகர்- எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா
பலாத்காரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை என்பதை கூறுவதுதான் தேசப்பற்று: நடிகர் சித்தார்த்
அடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை! நடிகர் சித்தார்த்
சித்தார்த் ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை!
டுவிட்டரில் சித்தார்த் கூறிய கருத்து யாருக்கு?
இரண்டாவது கட்ட நிவாரண பணியில் இறங்கிய RJ பாலாஜி, சித்தார்த்!
வெள்ள நிவாரணப் பணிகளில் மக்களைக் கவர்ந்த நடிகர்கள்!
படங்களை தூக்கி எறிந்த சித்தார்த் - மக்கள் பாராட்டு
நிவாரணப் பணிகளில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகிவிட்ட நடிகர் சித்தார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions