விபத்தில் சிக்கிய நடிகர் சித்தார்த் பரதன் மேலும் கவலைக்கிடம்

Bookmark and Share

விபத்தில் சிக்கிய நடிகர் சித்தார்த் பரதன் மேலும் கவலைக்கிடம்

மலையாள பட உலகில் பிரபல டைரக்டராக திகழ்ந்தவர் மறைந்த இயக்குனர் பரதன். இவர் முன்னணி மலையாள நடிகர்களான மோகன்லால், மம்முட்டி உள்பட பலரை வைத்து படங்கள் இயக்கி உள்ளார். 

மேலும் தமிழில் கமலஹாசன் நடிப்பில் ‘தேவர் மகன்’ படத்தை டைரக்டு செய்து இருந்தார். இவரது மகன் சித்தார்த் பரதன். இவரும் தந்தை வழியில் பல மலையாள படங்களை டைரக்டு செய்து உள்ளார். மேலும் பல படங்களில் சித்தார்த் பரதன் நடித்து உள்ளார். 

தந்தையை போல மலையாள பட உலகில் புதிய நட்சத்திரமாக இவர் முத்திரை பதித்து வருகிறார். இவரது வீடு கொச்சி அருகே திருப்பணித்துறை என்ற இடத்தில் உள்ளது. நேற்று பகல் இவர் படப்பிடிப்பு முடிந்து தனது காரில் வீடு திரும்பியபோது திருப்பணித்துறை பகுதியில் அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த ஒரு காம்பவுண்ட் சுவரில் மோதி நொறுங்கியது. 

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சித்தார்த் பரதன் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்ப்பட்டுள்ளார். சித்தார்த் பரதன் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 

கார் விபத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. 24 மணி நேரம் கழித்துதான் சித்தார்த் பரதன் உடல்நிலை பற்றி தெரிவிக்கமுடியும் என்று டாக்டர்கள் கெடு விதித்துள்ளனர். 

இதற்கிடையில் சித்தார்த் பரதன் விபத்தில் சிக்கிய தகவல் கிடைத்ததும் மலையாள நடிகர்கள் மம்முட்டி, திலீப், கமல், சத்யன் அந்திக்காடு, நடிகைகள் காவ்யா மாதவன், மஞ்சுபிள்ளை, கீது உள்பட பலர் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடல்நிலை பற்றி டாக்டர்களிடம் விசாரித்தனர்.

மேலும் கேரள முதல் மந்திரி உம்மன்சாண்டியும் போன் மூலம் சித்தார்த் பரதன் உடல்நிலை பற்றி விசாரித்தார்.


Post your comment

Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பையே கலாய்த்து தள்ளிய தமிழ் முன்னணி நடிகர்- எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா
பலாத்காரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை என்பதை கூறுவதுதான் தேசப்பற்று: நடிகர் சித்தார்த்
பைரவா TRP ரேட் என்ன தெரியுமா, எத்தனையாவது இடம்? இதோ
பைரவா படத்தால் எனக்கு இத்தனை கோடி நஷ்டம்- கோயமுத்தூர் விநியோகஸ்தர் அதிர்ச்சி தகவல்
அடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை! நடிகர் சித்தார்த்
Director Bharathan Proved himself through Bhairava
பைரவா ஷூட்டிங்கில் இப்படியும் சில விசயங்கள் ? இயக்குனர் பரதன்
கீர்த்தி சுரேஷிற்காக விஜய் எடுக்கும் அவதாரம்- இது தான் பைரவா படத்தின் கதையா?
பைரவா பற்றி வதந்தி பரப்புவது யார்? இயக்குனர் பரதன் புதிய குற்றச்சாட்டு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions