பாபி சிம்ஹாவுடன் நடிக்க மறுத்த சித்தார்த்!

Bookmark and Share

பாபி சிம்ஹாவுடன் நடிக்க மறுத்த சித்தார்த்!

நேரம் படத்தில் வட்டிக்கு பணம் கொடுப்பவராக நடித்திருந்த பாபிசிம்ஹா, சித்தார்த் நடித்த ஜிகர்தண்டாவில் மதுரை ஏரியா ரவுடியாக நடித்தார். ஆனால் அந்த படத்தில் அந்த ரவுடி கதாபாத்திரத்தை மையப்படுத்தியே கதை பின்னப்பட்டிருந்ததால் படம் வெளியானபோது கதாநாயகன் சித்தார்த்தை விட வில்லன் பாபி சிம்ஹாவுக்குத்தான் நல்ல பெயர் கிடைத்தது, அவர்தான் பேசப்பட்டார்.

இருப்பினும், பாபி சிம்ஹா என் தம்பி. அதனால் என் படத்தில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது எனக்கு சந்தோசமே என்று ஒரு மேடையில் சொன்னார் சித்தார்த். ஆனபோதும், அதன்பிறகு பாபியுடன் அவர் முன்பு மாதிரி நட்பு வைத்துக்கொள்ளவில்லை.

இந்த நிலையில், சமீபத்தில் சித்தார்த்திடம் கதை சொன்ன ஒரு டைரக்டர், அந்த படத்தில் இன்னொரு ஹீரோ கேரக்டர் இருப்பதாக சொன்னவர், அந்த வேடத்துக்கு பாபி சிம்ஹாவை புக் பண்ணயிருப்பதாக கூறினாராம்.

ஆனால், அதைக்கேட்டு செம டென்சனாகி விட்டாராம் சித்தார்த். அப்படின்னா உங்க படத்துல நான் இல்லேன்னு முடிவு பண்ணிக்கிடுங்க என்று உரக்க சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டாராம்.

அதையடுத்து அவரை சமாதானம் செய்த டைரக்டர், வேறு யாராவது வளர்ந்து வரும் நடிகரை அந்த வேடத்தில் நடிக்க வைக்கிறேன் என்று சித்தார்த்திடம் கேட்டுக்கொண்ட பிறகே நடிப்பதற்கு சம்மதம் சொன்னாராம்.


Post your comment





Related News
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
பாபி சிம்ஹா படத்தில் இணைந்த விஷால்!
பாபி சிம்ஹாவுக்கு வில்லனான பிரசன்னா!
திருட்டு பயலே இரண்டாம் பாகத்தில் இணையும் பாபி சிம்ஹா – பிரசன்னா!
அஜித் பாணியில் பாபி சிம்ஹா!
மெட்ரோ தெலுங்கில் ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்?
ஹிந்திக்கு செல்லும் தமிழின் சமீபத்திய மெகாஹிட் படம்!
உற்சாகத்தில் மிதக்கும் மெட்ரோ படக்குழுவினர் !
கோ 2 வசூல் விவரம் வெளியானது!
சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்ற பாபி சிம்ஹா படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions