ரீமேக் படமே வேண்டாம்! சித்தார்த் திடீர் முடிவு

Bookmark and Share

ரீமேக் படமே வேண்டாம்! சித்தார்த் திடீர் முடிவு

லூசியா கன்னட படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்கு பல நடிகர்கள் போட்டிபோட்ட நிலையில், சித்தார்த் புகுந்து அந்த படத்தில் நான்தான் நடிப்பேன் என்று கேட்டு வாங்கி நடித்தார்.

அதோடு, அந்த படத்தை முதல்நாள் பார்த்தபோதே, அதை யாராவது தமிழில் ரீமேக் செய்தால் நான்தான் நடிக்க வேண்டும் என்று எப்போதோ முடிவெடுத்து விட்டேன் என்றும் கூறினார்.

அப்படி அதிக ஆர்வத்துடன் அவர் நடித்த எனக்குள் ஒருவன் படம் தற்போது சித்தார்த் எதிர்பர்த்தபடி ஓடவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்துள்ளார் அவர். விளைவு, இந்த படத்தை முடித்ததும் தெலுங்கு, கன்னடத்தில் வெற்றி பெற்ற சில படங்களின் தமிழ் ரீமேக்கில் நடிக்க வேண்டும் என்ற சில படங்களை டிக் பண்ணி வைத்திருந்த சித்தார்த், இப்போது அந்த ஆசையை விட்டொழித்து விட்டார்.

அதனால், அந்த படங்களை இயக்கயிருந்த டைரக்டர்கள் அவரை தொடர்பு கொண்டபோது, ஒவ்வொரு மொழி ரசிகர்களின் ரசனையும் ஒவ்வொரு மாதிரியாக உள்ளது. அதனால் மற்ற மொழியில் ஓடிய படத்தை தமிழில் ரீமேக் செய்தால் வெற்றி கிடைப்பது அரிதுதான். அதனால் மீண்டும் மீண்டும் ரீமேக் படங்களில் நடித்து ரிஸ்க் எடுக்க நான் தயாராக இல்லை என்று மறுத்து விட்டாராம் சித்தார்த்.


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!
இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஆயிரத்தில் ஒருவன் சிறப்புத் திரையிடல்!
சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்!
தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்குக்கு கிடைத்த பாராட்டு!
அதர்வா படத்தில் இணைந்த தனி ஒருவன் கூட்டணி!
தமிழ் சினிமாவின் ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவிக்கு பிறந்தநாள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions