சமந்தாவை டுவிட்டரில் ஃபாலோ பண்ணுவதையும் நிறுத்திய சித்தார்த்

Bookmark and Share

சமந்தாவை டுவிட்டரில் ஃபாலோ பண்ணுவதையும் நிறுத்திய சித்தார்த்

சித்தார்த், சமந்தா காதல் ஜோடிகளாக வலம் வந்துகொண்டிருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் திடீரென்று பிரேக் அப் செய்து கொண்டனர். இதற்கான காரணத்தை இருவருமே சொல்லாத நிலையில் சமந்தாவை நடிக்கக்கூடாது என்று சித்தார்த் தடை போட்டதுதான் பிரேக் அப்புக்கு காரணம் என்று பேசப்படுகிறது.

இதற்கு பிறகும் சித்தார்த்தை பற்றி தவறான கமென்ட் எதுவும் செய்யாமல், தான் உண்டு தன்வேலை உண்டு என்று சமந்தா இருந்து வருகிறார். முன்னதாக இருவருமே இணையதள பக்கத்தில் தினமும் கலக்கிக்கொண்டிருந்தனர். ஒருவரைப்பற்றியொருவர் நலம் விசாரித்து பாராட்டிக்கொள்வதும்,  பொதுவான சர்ச்சை என்று வந்தால் ஒருசேர குரல் கொடுப்பதுமாக இருந்தனர்.

பிரேக் அப்பிற்கு பிறகு  நிலைமை மாறிவிட்டது. சமந்தாவை டுவிட்டரில் பின்தொடர்ந்து வந்த சித்தார்த் அதை நிறுத்திக்கொண்டார். சமந்தா முன்பு என்ன கருத்துபோட்டாலும் அதற்கு கமென்ட் போட்டுக்கொண்டிருந்த சித்தார்த், இப்போது அதுபற்றி கண்டுகொள்வது இல்லை. ஆனாலும் சமந்தாவோ முன்னாள் காதலன் சித்தார்த்துக்கு தந்துவந்த ஆதரவை நிறுத்தாமல் தொடர்ந்தார்.

அவரது 2 புதியபடங்கள் திரைக்கு வந்தபோது அதற்கு வாழ்த்து, பாராட்டு தெரிவித்து மெசேஜ் போட்டார். இதற்கும் சித்தார்த் பதில் எதுவும் சொல்லவில்லை. இது சமந்தாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அதுகுறித்து மறைமுகமாக டுவிட்டரில் வருத்தம் வெளியிட்டிருக்கிறார் சமந்தா.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions