வில்லனாக நடிக்கும் காமெடியன் சித்தார்த் விபின்!

Bookmark and Share

வில்லனாக நடிக்கும் காமெடியன் சித்தார்த் விபின்!

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குதானேஆசைப்பட்டாய் பாலகுமாரா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்பட சில படங்களுக்கு இசையமைத்தவர் சித்தார்த் விபின்.

அதோடு, இதற்குதானேஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நந்திதாவின் பாய் ப்ரண்டாக ஒரு காட்சியில் வந்து விஜயசேதுபதியிடம் அடிவாங்கிக்கொண்டு ஓட்டம் பிடிக்கும் வேடத்தில் நடித்தார்.

அந்த காட்சியில், இதயம் பலவீனமானவங்க, 16 வயதுக்குட்பட்டவங்க இந்த சண்டை காட்சிய தயவு செஞ்சு பார்க்காதீங்க என்று சொல்லிவிட்டு விஜயசேதுபதியை அடித்து சாய்ப்பவரை போன்று திரும்புவார் அதற்குள் இவரை அவர் நைய புடைத்து விரட்டியடித்து விடுவார்.

அந்த காட்சி பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனதால், தொடர்ந்து வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் படத்திலும் நடித்த சித்தார்த் விபின், இப்போது மா.பா.க.ஆனந்த் நடிக்கும் ஒரு படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

ஆனால் சிரிப்பு நடிகராக மட்டுமே நடித்து ரசிகர்களிடம் சேர்ந்துள்ள சித்தார்த் விபின் சீரியசான நடிப்பில் எந்த அளவுக்கு ரசிகர்களை கவரப்போகிறார் என்பது அப்படம் திரைக்கு வரும்போதுதான் தெரியும்.


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பையே கலாய்த்து தள்ளிய தமிழ் முன்னணி நடிகர்- எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
பலாத்காரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை என்பதை கூறுவதுதான் தேசப்பற்று: நடிகர் சித்தார்த்
விஜய் படத்தை போலவே நடந்த உண்மை சம்பவம்
அடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை! நடிகர் சித்தார்த்
சித்தார்த் ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை!
ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்!
டுவிட்டரில் சித்தார்த் கூறிய கருத்து யாருக்கு?
இரண்டாவது கட்ட நிவாரண பணியில் இறங்கிய RJ பாலாஜி, சித்தார்த்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions