ஹேப்பி பர்த்டே சிம்பு என்கிற எஸ்டிஆர்!

Bookmark and Share

ஹேப்பி பர்த்டே சிம்பு என்கிற எஸ்டிஆர்!

சிம்பு, மற்ற வாரிசு நடிகர்கள் போல டி.ஆரின் வாரிசு என்ற முத்திரையோடு தான் சினிமாவுக்குள் நுழைந்தார்.

சிம்புவை பிறவிக்கலைஞன் என்றே அழைக்கலாம். சிம்புவின் திறமையை சிறு வயதிலேயே கண்டறிந்த டி.ஆர் சிம்புவுக்கு நான்கு வயது இருக்கும்போதே ஒரு தாயின் சபதத்தில் அறிமுகப்படுத்திவிட்டார்.

கமலுக்கு பிறகு குழந்தை நட்சத்திரமாக நடிக்கும்போதே பெரிய ரசிகர், ரசிகை வட்டாரத்தை பெற்றவர் சிம்பு தான்.

அதிலும் டி.ஆர் ஸ்டைல் வசனத்தை சிம்பு திரையில் பேசினாலே கிளாப்ஸும், விசிலும் பறக்க ஆரம்பித்தன.

ஆக, எட்டு வயதுக்குள்ளேயே தமிழ்நாட்டின் பெஸ்ட் எண்டெர்டெய்னராகவே மாறினார்.

2002ல் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் டி.ஆர் சிம்புவை ஹீரோவாக அறிமுகப்படுத்தியபோது சிம்புவிடம் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை.

இன்றைக்கு சீரியல்களே போரடிக்கும் காலகட்டத்தில் டி.ஆர் ஃபார்முலா எடுபடுமா? என்றுதான் சினிமா வட்டாரங்கள் கிண்டல் அடித்தன.

டி.ஆரும் தனது மகனுக்காக அந்த படத்தை முதன்முறையாக இளைஞர்களை கவரும் விதத்தில் எடுத்திருந்தார். ஆனால் சிம்புவுக்கு முதல் படம் பெரிதாக கை கொடுக்கவில்லை. அதற்கு அடுத்து சிம்பு நடித்த தம், அலை இரண்டுமே செம அடி தான்.

விரலை ஆட்டி ஆட்டி நடிக்கிறார். ரொம்ப அதிகப்பிரசங்கித்தனம் என்றெல்லாம் விமர்சனங்கள் வேறு.

இந்நிலையில் வேறொரு வாரிசு ஹீரோவாக இருந்திருந்தால் காணாமலேயே போயிருப்பார். ஆனால் சிம்புவுக்கு அதற்கு பிறகு தான் பக்குவம் வந்தது.

சினிமாவில் ஜெயிக்க திறமையும், உழைப்பும் மட்டுமே போதாது. தான் பக்குவப்பட்டால் தான் முடியும் என்பதை உணர்ந்த சிம்பு நடித்த படம் தான் கோவில்.

இது சிம்புவை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது. அதன் பின்னர் தான் செம்ம ஃபார்முக்கு வந்தார் சிம்பு. முக்கியமாக மன்மதன் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆக சிம்புவின் திரைக்கதையே முக்கிய காரணமாக அமைந்தது.

பொதுவாக சிம்பு படம் என்றாலே ஓவர் பில்டப் இருக்கும் என பேசியவர்களுக்கு மன்மதன் தக்க பதிலடியை கொடுத்தது.

தொட்டி ஜெயாவில் அமைதியாகவே இருந்து தனக்கு எப்படிபட்ட கேரக்டரும் செட் ஆகும் என நிரூபித்தார். சிம்புவுக்கு நல்ல ஆர்ட்டிஸ்ட், திறமையானவர் என பேர் எடுக்க கால அவகாசம் தேவைப்படவில்லை. டி.ஆர் அந்த அளவுக்கு சிம்புவை வளர்த்திருந்தார்.

ஆனால் தான் ஒரு டைரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்பதை நிரூபிக்கவும், தன்னை பற்றி இண்டெஸ்ட்ரி முழுக்க பரவியிருந்த கெட்ட பேரை துடைக்கவும்தான் சில காலம் தேவைப்பட்டது. அது சினிமாவில் சகஜம்தானே.

திறமை இருப்பவனை தோற்கடிக்க ஒரே வழி அவன் திமிரானவன் என்று பேசுவதுதான். இதை உணர்ந்தபிறகு தான் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார் சிம்பு. இப்போதும் கூட சிம்புவின் கேரியரில் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் இல்லை. அந்த ஏற்ற இறக்கங்களில் இருந்து அவர் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம்.

புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் சிம்புவுக்கு ஈடு இணை யாரும் இருக்க முடியாது. விண்ணைத் தாண்டி வருவாயா என்ற படம் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து தன்னுடைய எதிரியின் இதயத்திலும் இடம் பிடித்த சிம்பு அதற்கு பிறகு அந்த படம் அளவிற்கு பெரிய ஹிட் கொடுக்கவில்லை.

ஆனாலும் அவருக்கான ரசிகர் வட்டமும், மார்க்கெட் வேல்யூவும் அப்படியேதான் இருந்தது. நீண்ட காலம் கழித்து ரிலீஸ் ஆன வாலு, சிம்புவால்தான் ஹிட் ஆனது. தனிப்பட்ட கேரக்டரை எடுத்துக்கொண்டால் ரொம்ப ஓப்பனாக பேசக்கூடியவர் சிம்பு.

ஒரு டிவி டான்ஸ் ஷோ ஒன்றில் அவ்வாறு வெளிப்படையாக பேசி சர்ச்சையானதும், பின்னர் அந்த விஷயத்தில் சிம்பு மீது தவறே இல்லை என நிரூபிக்கப்பட்டதும் உலகத்துக்கே தெரியும்.

தனக்கு மனதில் என்ன படுகிறதோ அதை அப்படியே பேசிவிடும் பழக்கம் சிம்புவுக்கு உண்டு. லிட்டில் சூப்பர் ஸ்டாராகத்தான் அறிமுகமானார் சிம்பு.

இப்போது யங் சூப்பர்ஸ்டார் ஆகியிருக்கிறார். பீப் ஸாங்குக்கு பிறகு ரொம்பவே அமைதி காக்கிறார். தேவையான விஷயங்களுக்காக வாய்ஸ் கொடுக்கவும் தயங்குவதில்லை.

ஜல்லிக்கட்டு விஷயத்தில் பொங்கலுக்கு முன்பே குரல் கொடுத்தார். சினிமாக்காரர்களில் முதலில் ஆதரித்தவர் சிம்புதான். அந்த விதத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஒரு வகையில் வித்திட்டதும் சிம்புதான்.

இப்போது கூட காவல்துறை தடியடியை பகிரங்கமாக விமர்சித்திருக்கிறார். இத்தனைக்கும் கடந்த தேர்தல் வாக்குப்பதிவின் போதே அதிமுகவுக்கு ஆதரவாக ஓப்பனாக வாய்ஸ் கொடுத்தவர் சிம்பு. சமீபத்திய வாய்ஸ்களின் மூலம் எல்லா தரப்பு மக்களிடமும் நல்ல பெயரை எடுத்து விட்டார்.

சிம்புவிடம் இருந்த ஒரே மைனஸ் பாய்ண்ட் லேட். ஆனால் இப்போது அப்படி இல்லை ஷூட்டிங்குக்கு சரியாக வந்து விடுகிறார். பழைய சிம்புவாக இல்லை என்கிறார்கள்.

ஆக, சிம்புவுக்கு இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்துவிட்டது. வீட்டில் தீவிரமாக பெண் பார்த்து வருகிறார்கள்.

அடுத்த பிறந்தநாளுக்குள் மண விழா காணவும் வாழ்த்துவோம்! -

க.ராஜீவ் காந்தி


Post your comment

Related News
மீண்டும் வருவேன்; நம்புங்கள்! - ரசிகர்களுக்கு சிம்பு வெளியிட்ட வீடியோ
சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் டீசர்... மீண்டும் நண்பனுக்காக உதவிய சிம்பு!
நிஜ நாயகன் சிலம்பரசன் - நெகிழ்ந்து பாராட்டும் இளைஞர்கள்
கைவிடப்பட்டது சிம்பு படம் ? மீண்டும் தனுஷுடன் இணையும் வெற்றிமாறன்!
திருமண‌துக்கு ஓகே சொல்லிவிட்ட சிம்பு
உலக அமைதிக்காக சிம்பு பாடிய பாடல் !
ஷூட்டிங் ஸ்பாட்டில் பத்திரிகையாளரை அலையவைத்த‌ சிம்பு!
சிம்புவுக்கு திடீர் வயிற்றுவலி!
சிம்புவுடன் நடிக்க ராணா மறுப்பு !
விஜய் டிவி - பிலிம்பேர் விருதுகள் :சிம்பு விமர்சனம் !
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions