சிம்புவின் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு

Bookmark and Share

சிம்புவின் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு

நடிகர் சிம்பு பாடிய ஆபாச பாடல்கள் கடந்த மாதம் இணையதளத்தில் வெளியானது. இதையடுத்து கோவை மாவட்டம், ரேஸ்கோர்ஸ் போலீசாரும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் தனித்தனியாக நடிகர் சிம்பு மீது வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் சிம்பு மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையின்போது, அவர் மீது பதிவான வழக்குகளில் உள்ள சட்டப்பிரிவுகள் அனைத்தும் ஜாமீனில் வெளிவரக்கூடியது என்பது தெரிய வந்தது.

இதையடுத்து ஜனவரி 29-ந் தேதிக்குள் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு சிம்பு விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 

இதையடுத்து இந்த உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், போலீசார் முன்பு நேரில் ஆஜராக காலஅவகாசம் வேண்டும் என்றும் ஐகோர்ட்டில் சிம்பு இரண்டு மனுக்களை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் முத்துகுமாரசாமி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 


Post your comment





Related News
அந்த நடிகர் இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது - சந்தானம் ஒபன் டாக்.!
நயன்தாரா கல்யாணத்தில் கலந்துகொள்வீர்களா? யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறிய சிம்பு!
சிம்பு இயக்குனருடன் இணைந்த விக்ரம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
சிம்பு ரசிகர்களுக்கு விரைவில் இன்னொரு டிரீட்!
அச்சம் என்பது மடமையடா வெற்றி உங்களுடையது – ரசிகர்களுக்கு சிம்பு நன்றி!
சிம்புவை என்னிடம் விட்டால் ரஜினி போல் மாற்றுவேன் – கௌதம்!
ரகுமானை தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா தியேட்டருக்கு விசிட் அடித்த சிம்பு!
தமிழகத்தில் மட்டும் அச்சம் என்பது மடமையடா இத்தனை கோடி வசூலா?
பைரவாவுக்கு டிரீட் எங்க? விஜய் நாயகியிடம் கேட்ட சிம்பு நாயகி!
சிம்புவுக்காக இதையும் இறங்கிவந்து செய்த ரகுமான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions