அமீரின் இயக்கத்தில் நடிக்கிறார் சிம்பு

Bookmark and Share

அமீரின் இயக்கத்தில் நடிக்கிறார் சிம்பு

கவுதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா, செல்வராகவனின் இயக்கத்தில் கான் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் சிம்பு, அடுத்ததாக, பருத்திவீரன் அமீர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

சிம்பு நடிப்பில் வாலு உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையிலும், சில பிரச்னைகளின் காரணமாக, படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. வாலு படத்தின் ரிலீஸ் தேதி, இதுவரை 4 தடவைகளுக்கு மேல் மாற்றியமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, பாண்டிராஜ் இயக்கத்தில், சிம்பு - நயன்தாரா நடித்துள்ள "இது நம்ம ஆளு" படமும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இது நம்ம ஆளு படத்தை இயக்கிவந்த இயக்குநர் பாண்டிராஜ், இந்த இடைவெளியை பயன்படுத்தி சூர்யா தயாரிப்பில் ஹைக்கூ படத்தையும் நிறைவு செய்திருந்த நிலையில், விஷால் நடிப்பில் புதுப்படத்திற்கும் பூஜை போட்டு முடித்துள்ளார்.

சிம்பு, தற்போது கவுதம் மேனனின் "அச்சம் என்பது மடமையடா" படத்தில் நடித்து வருகிறார். இதன்பின், சிம்பு, செல்வராகவனின் இயக்கத்திலான கான் படத்தில் நடிக்க உள்ளார். இவ்விரு படங்களுக்கு பிறகு, அமீரின் இயக்கத்திலான படத்தில் சிம்பு நடிக்க உள்ளார்.  

இந்தப் படத்தை, பருத்திவீரன் போன்று ஆக்ஷன் படமாக எடுக்க அமீர் திட்டமிட்டுள்ளார். மாஸ் எண்டர்டெய்னராக உருவாக உள்ள இப்படத்தில், முன்னணி நடிகை, ஹீரோயினாக நடிக்க உள்ளார். அனிருத் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமீரின் இயக்கத்தில் தான் நடிக்க உள்ளதை, சிம்புவே, டுவிட்டரில் உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
அந்த நடிகர் இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது - சந்தானம் ஒபன் டாக்.!
நயன்தாரா கல்யாணத்தில் கலந்துகொள்வீர்களா? யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறிய சிம்பு!
சிம்பு இயக்குனருடன் இணைந்த விக்ரம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
சிம்பு ரசிகர்களுக்கு விரைவில் இன்னொரு டிரீட்!
அச்சம் என்பது மடமையடா வெற்றி உங்களுடையது – ரசிகர்களுக்கு சிம்பு நன்றி!
சிம்புவை என்னிடம் விட்டால் ரஜினி போல் மாற்றுவேன் – கௌதம்!
ரகுமானை தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா தியேட்டருக்கு விசிட் அடித்த சிம்பு!
தமிழகத்தில் மட்டும் அச்சம் என்பது மடமையடா இத்தனை கோடி வசூலா?
பைரவாவுக்கு டிரீட் எங்க? விஜய் நாயகியிடம் கேட்ட சிம்பு நாயகி!
சிம்புவுக்காக இதையும் இறங்கிவந்து செய்த ரகுமான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions