புதிய படத்தில் நடிபதற்கு 90 கிலோ குண்டனாக மாறும் சிம்பு!

Bookmark and Share

புதிய படத்தில் நடிபதற்கு 90 கிலோ குண்டனாக மாறும் சிம்பு!

சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பெயரிப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடிக்கவிருக்கிறார். 

இந்த படத்தில் சிம்புவுக்கு மேக்கப் போடுவதற்காக ஹாலிவுட் கலைஞர் சீன் புட் நியமிக்கப்பட்டுள்ளார். அதனால், இப்படத்தில் அவருடைய கெட்டப்புக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்நிலையில், சிம்பு இந்த படத்தில் நடிக்கும் ஒரு கெட்டப் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. 

அதன்படி, இப்படத்தில் சிம்பு 90 கிலோ எடை கொண்ட மனிதராக நடிக்கவிருக்கிறாராம். அதற்காக தனது உடல் எடையை விரைவில் அதிகரிக்கவுள்ளாராம். அதற்கான முயற்சிகளிலும் சிம்பு இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த கதாபாத்திரத்திற்குண்டான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதும், உடனே தனது உடல் எடையை குறைக்கவும் முடிவு செய்துள்ளார். இப்படத்தை முடித்துவிட்டு ‘வாலு’ இயக்குனர் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிம்பு நடிப்பில் ஏற்கெனவே ‘இது நம்ம ஆளு’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இவ்விரு படங்களும் விரைவில் வெளியாகவிருக்கின்றன.


Post your comment





Related News
அந்த நடிகர் இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது - சந்தானம் ஒபன் டாக்.!
நயன்தாரா கல்யாணத்தில் கலந்துகொள்வீர்களா? யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறிய சிம்பு!
சிம்பு இயக்குனருடன் இணைந்த விக்ரம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
சிம்பு ரசிகர்களுக்கு விரைவில் இன்னொரு டிரீட்!
அச்சம் என்பது மடமையடா வெற்றி உங்களுடையது – ரசிகர்களுக்கு சிம்பு நன்றி!
சிம்புவை என்னிடம் விட்டால் ரஜினி போல் மாற்றுவேன் – கௌதம்!
ரகுமானை தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா தியேட்டருக்கு விசிட் அடித்த சிம்பு!
தமிழகத்தில் மட்டும் அச்சம் என்பது மடமையடா இத்தனை கோடி வசூலா?
பைரவாவுக்கு டிரீட் எங்க? விஜய் நாயகியிடம் கேட்ட சிம்பு நாயகி!
சிம்புவுக்காக இதையும் இறங்கிவந்து செய்த ரகுமான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions