ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சிம்பு

Bookmark and Share

ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சிம்பு

சிம்பு இன்று தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பல்வேறு திரையுலக பிரலங்களும், அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று இரவே தனது அப்பா, அம்மா மற்றும் நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார் சிம்பு. பின்பு, நள்ளிரவில் சிம்புவின் வீட்டுக்கு முன்பு அவரது ரசிகர்கள் திரண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூற வந்துள்ளனர்.

ரசிகர்களின் ஆரவாரத்தை கேட்டு வெளியே வந்த சிம்பு, நள்ளிரவில் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதனால் ரசிகர்கள் மேலும் உற்சாகம் அடைந்துள்ளனர். 

சிம்புவின் பிறந்தநாளையொட்டி அவர் நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. நேற்று இரவு இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். நயன்தாரா, ஆண்ட்ரியா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions