அந்த நடிகர் இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது - சந்தானம் ஒபன் டாக்.!

Bookmark and Share

அந்த நடிகர் இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது - சந்தானம் ஒபன் டாக்.!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் சந்தானம், பிரபல தொலைக்காட்சியில் காமெடி தர்பார் நிகழ்ச்சியை நடத்தி கொண்டிருந்த அவருக்கு வெள்ளித்திரை யோகம் அடித்ததே நடிகர் சிம்புவால் தான் என்பது பலருக்கும் தெரியும்.

இவர் தற்போது ஹீரோவாகி விட்டார், சர்வர் சுந்தரம், சக்க போடு போடு ராஜா என அடுத்தடுத்த படங்களை கை வசம் வைத்துள்ளார். இவருடைய சர்வர் சுந்தரம் படத்திற்காக ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார், அப்போது அவரிடம் சிம்புவை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சிம்பு தான் எனக்கு அவருடைய படத்தில் முதல் முதலாக வாய்ப்பு கொடுத்தார், என்னுடைய வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவரும் அவர் தான், சிம்பு இருக்கும் வரை எனக்கு எப்போதும் பலம் தான் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions