சிம்புவும் - சித்துவும் இரட்டை வாலுகள்!

Bookmark and Share

சிம்புவும் - சித்துவும் இரட்டை வாலுகள்!

சிம்புவும், ஜெயப்பிரதாவின் மகன் சித்துவும் நண்பர்கள் மட்டுமல்ல எதிரெதிர் வீட்டுக்காரர்களும் கூட. இருவரும் சிறு வயது முதல் நண்பர்கள். மிகவும் கூச்சம், பயம், தயக்கம் என்று சாந்த சொரூபியாக இருந்த சித்துவை கலகலப்பு பேர்வழியாக மாற்றியதில் சிம்புவின் பங்கு உண்டாம். எந்த அளவுக்கு மாற்றினார் என்றால் திருட்டு தம்மடிக்குமளவுக்கு மாற்றினாராம். அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டு அரட்டையடிப்பது, வெளியில் செல்வது என்றிருப்பார்களாம்.

ஒருவர் வீட்டில் பிரச்சினை என்றால் மதிலேறிக் குதித்து இன்னொருவர் வீட்டுக்கு போய் ஒளிந்து கொள்வதுண்டாம். கார் டிரைவிங்கிலும் அப்படி இருவருமே தங்கள் கார்களை மாற்றிக் கொண்டு பழகியதுண்டாம். ஜாலி, கிண்டல், கலாய்ப்பு என்று இருவரும் தொடங்கிவிட்டால் பொழுது போவதே தெரியாத அளவுக்கு கக்சேரி களை கட்டுமாம்.

கிரிக்கெட் விளையாட இருவரும் சேர்ந்து வெளியில் செல்வதுண்டாம். இப்படி சிம்புவும் சித்துவும் இரட்டை வாலுகள் போல ஜாலியாகத் திரிந்தவர்களாம். ஒருவர் பற்றி ஒருவர் ஆப்த தெக்கார்டு ரகசியங்கள் ஆயிரம் வைத்துள்ளார்களாம்.

அது சரி, சிம்புவின் அபிமான (!) நடிகை ஹன்சிகா சித்துவின் படத்தில் நடிக்கிறாரே இதில் சிம்புவுக்கு வருத்தம் இருக்காது தானே? உயிரே உயிரே படத்தின் ஆடியோ விழாவுக்குக் கூட சிம்பு வரவில்லையே ஏன்?


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions