குருபெயர்ச்சி சிம்புக்கு அமோகமாக இருக்கும்! -டி.ஆர் ஆரூடம்

Bookmark and Share

குருபெயர்ச்சி சிம்புக்கு அமோகமாக இருக்கும்! -டி.ஆர் ஆரூடம்

இயக்குனர் டி.ராஜேந்தர் ஜோதிடத்தில் மீது அபார நம்பிக்கை கொண்டவர். 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் ஜோதிடத்தை ஆராய்ச்சி செய்து கொண்டு வருகிறார்.

மேலும், எந்தவொரு விசயமாக இருந்தாலும் நல்லநேரம் பார்த்தே பக்காவாக செய்யக்கூடியவர். அதோடு எங்காவது வெளியில் செல்லும்போது மூன்று பேராக செல்ல நேர்ந்தால், நான்காவது ஒருத்தருக்காக ஒரு சிறிய கல்லை எடுத்து காருக்குள் போட்டுக்கொண்டு செல்வார்.

அந்த அளவுக்கு அவர் ஜோதிடத்தை முழுசாக நம்பக்கூடியவர். அந்த வகையில், தான் இப்போது ஹீரோவாக நடித்தால் வெற்றி வாய்ப்பு கிடைக்காது என்பதினால்தான் இயக்கி நடிப்பதை தள்ளி வைத்திருக்கிறாராம்.

மேலும், சிம்பு நடித்த படங்கள் கடந்த 3 ஆண்டுகளாக திரைக்கு வராமல் இருப்பதற்கு கிரகநிலை சரியில்லாததுதான் காரணமாம். ஆனபோதும், அதெல்லாமே இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு சரியாகி விடுமாம்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து சிம்பு நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றிகளை பெறுமாம். இந்நிலையில், கிரக தோஷங்களை கழிப்பதற்காக சமீபத்தில் சிம்புவுக்கு ஒரு பெரிய பரிகார பூஜையும் நடத்தப்பட்டுள்ளதாம்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions