சிம்புவுக்கு எதிராக சதி செய்வது யார் ?

Bookmark and Share

சிம்புவுக்கு எதிராக சதி செய்வது யார் ?

வாலு பட வெளியீடு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனையை அடுத்து இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் டி.ராஜேந்தர். அப்போது சிம்புவின் படங்கள் வெளிவருவதைத் தடுக்க திரையுலகத்தில் இருக்கும் ஒரு கூட்டம் சதி செய்வதாகக் குறிப்பிட்டார். அந்த கூட்டம் யார் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு சமயம் வரும் போது அது பற்றிப் பேசுகிறேன் என்றார்.

வாலு படம் ஜுலை 17ம் தேதி வெளிவருகிறது என்று எப்போதோ விளம்பரப்படுத்தி வருகிறேன். ஆனால், நேற்று முன் தினம் வரைக்கும் சும்மா இருந்து விட்டு இப்போது வந்து வழக்குத் தொடர்வதன் பின்னணி என்ன என்று கேள்வி எழுப்பினார். அது மட்டுமல்ல இது நம்ம ஆளு படத்தைக் கூட வெளிவராமல் தடுக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்கிறார்.

வாலு படம் வெளிவரும் தினத்தன்று தனுஷ் நடித்துள்ள மாரி படம்தான் வெளிவருகிறது. வாலு படம் அந்த தினத்தில் வெளிவராமல் போனால் அதற்கான முழு ஆதாயமும் மாரி படத்திற்குத்தான் கிடைக்கும்.

அப்படியென்றால் தனுஷ்தான்  வாலு படத்தை வெளியிட தடுக்கிறாரா என்ற கேள்வியும் சந்தேகமில்லாமல் எழும். ஆனால், தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் கான் படத்தில் சிம்புவை நடிக்கச் சொன்னதே தனுஷ்தான். எனவே, அவர் கண்டிப்பாக அதை செய்ய வாய்ப்பு கிடையாது.

இப்படி பத்திரிகையாளர் முன்னிலை டி.ராஜேந்தர் சிலரைக் குற்றம் சாட்டி சொல்வது திரையுலகத்தில் கண்டிப்பாக பெரும் சலசலப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.


Post your comment





Related News
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
கமலுக்கு பேரனாகும் சிம்பு
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
சீமானுடன் கைகோர்க்கும் சிம்பு
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions