சிம்பு படத்துக்கு தடையா?: மீடியாக்களை அதிர வைத்த டி.ராஜேந்தர்

Bookmark and Share

சிம்பு படத்துக்கு தடையா?: மீடியாக்களை அதிர வைத்த டி.ராஜேந்தர்

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘வாலு’ படம் வருகிற ஜுலை 17-ந்தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தை வெளியிடும் மற்றொரு நிறுவனமான மேஜிக் ரேஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக, இப்படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ள சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் பத்திரிகைகளுக்கு விளக்கம் அளித்தார். 

அப்போது அவர் கூறும்போது:- 

நான் இப்படத்தின் விளம்பரத்தை ஜூன் 19-ந்தேதி முதல் விளம்பரப்படுத்தி வருகிறேன். அன்றைய தினம் முதல் இந்த விளம்பரங்களில் இடதுபுறத்தில் நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் பெயரையும், வலது புறத்தில் மேஜிக் ரேஸ் நிறுவனத்தின் பெயரையும், நடுவில் எனது நிறுவனமான சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் பெயரையும் பயன்படுத்தி வருகிறேன். 

அதுமட்டுமில்லாமல், ரம்ஜானை கொண்டாட, இன்ஷா அல்லாஹ் என்றும் ஜூலை 19-ந்தேதி வெளியான விளம்பரத்தில் பதிவு செய்திருந்தேன். நான் இறைவன் மீது நாட்டம் கொண்டவன். அதனால்தான், அந்த வாசகத்தை ‘வாலு’ படத்தின் விளம்பரத்தில் பதிவு செய்திருந்தேன். இறைவன் இந்த படத்தின் மீது நாட்டம் வைத்திருந்தால் கண்டிப்பாக ஜூலை 17-ந்தேதி ‘வாலு’ படம் வெளிவரும். 

மேலும், தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் மேஜிக் ரேஸ் நிறுவனத்தின் பெயரை நான் விளம்பரங்களில் பயன்படுத்தி வருகிறேன். இவ்வளவு நாள் வழக்கு தொடராமல், வெளியீட்டு தேதி நெருங்கும் சமயத்தில் அவர்கள் வழக்கு தொடர காரணம் என்ன? அவர்கள் இந்த படத்தின் உரிமையை கொண்டாட நினைக்கிறார்களா? அல்லது இப்படத்தை நாங்கள் வெளியிடுவதை தடுக்க நினைக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பினார். 

மேலும் அவர் பேசும்போது, நேற்று நீதிமன்றத்தில் மேஜிக் ரேஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. நிக் ஆர்ட்ஸ் தனது பதில் மனுவை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கிறது. உடனே, நீதிமன்றம் இந்த வழக்கு இதே நிலையிலேயே நீடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறது. 

ஆனால், இதை சில மீடியாக்கள் படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு விட்டது என்று வெளியிட்டு விட்டன. நீதிமன்றம் எந்த இடத்திலும் படத்திற்கு இடைக்காலத் தடை என்பதை கூறவில்லை. இதைவிடுத்து, மீடியாக்கள் இதுபோல் படத்திற்கு இடைக்கால தடை என்று கூறினால், அது கோர்ட் அவமதிப்பு வழக்காக ஆகிவிடாதா? இதுமாதிரி செய்திகள் வெளிவந்தது எனது மனதை ரொம்பவும் காயப்படுத்தி விட்டது. 

இந்த வழக்கு மீண்டும் வருகிற 13-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிமன்றம் இந்த படத்திற்கு என்ன தீர்ப்பு வழங்கினாலும் அதற்கு நான் தலை வணங்குகிறேன். 

என்னுடைய மகன் சிம்பு நடிப்பில் 3 வருடத்திற்கு பிறகு படம் வந்தாலும் அவருடைய ரசிகர்கள் இன்னமும் சிம்புவுக்கு பெரிய வரவேற்பு கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இதுதான் நாங்கள் சேர்த்த சொத்து. இதுபோதும். என்னுடைய மகனுக்காக இந்த படத்தை நான் வெளியிட முன்வந்துள்ளேன். மற்றபடி நான் சாதாரண மனிதன்தான். 

இந்த பிரச்சினையில் விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும் எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றி என்று பேசினார்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions