சிம்புவின் செயலுக்கு என்ன காரணம்?

Bookmark and Share

சிம்புவின் செயலுக்கு என்ன காரணம்?

சிம்புவின் அப்பாவான டி.ராஜேந்தர் அரசியல்வாதியாகவும் இருப்பதால் அவ்வப்போது தன்னைத் தன்மானத்தமிழன் என்று சொல்லிக்கொள்வார். ஆனால் அவரது மகனான சிம்புவோ தன் பெயரையே ஆங்கிலத்தில் எஸ்.டி.ஆர் என்று மாற்றிக்கொண்டவர்.

அதுமட்டுமல்ல எந்த சந்தர்ப்பத்திலும் அவர் தன்னை தமிழனாக அடையாளப்படுத்திக்கொண்டது இல்லை. தமிழ் உணர்வாளராகவும் இருந்ததில்லை.

இந்நிலையில் சிம்புவின் செயல் ஒன்று ஆச்சர்யப்படுத்தி உள்ளது. இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபிக்க உலக மக்களிடமிருந்து 1 மில்லியன் அதாவது 10 இலட்சம் வாக்குகள் கேட்டு இருக்கிறது - ஐ.நா மன்றம். இதற்கென தனி இணையதளம் தொடங்கப்பட்டு அதில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

தற்போது வரைக்கும் 8.43 இலட்சம் வாக்குகள் கிடைத்து இருக்கிறது. இன்னும் 6 ஆறு நாட்களே இருக்கும் நிலையில், இன்னும் சுமார் 1.57 லட்சம் வாக்குகள் தேவைப்படுகின்றன.

இந்த தகவலை குறிப்பிட்ட இணையதளத்தின் லிங்க் உடன் அஜித் ரசிகர்கள் தங்கள் வலைப்பகுதியில் ஷேர் செய்து ஓட்டுக்களை போடச் சொல்லி தங்களது நண்பர்களை கேட்டு வருகின்றனர்.

அஜித் ரசிகர்களின் ஒருவரான சிம்புவும் இதை தன் ட்விட்டரில் ரீட்வீட் செய்துள்ளார். அஜித்துக்கா இப்படி செய்தாரா... அல்லது இலங்கை மக்களுக்காக செய்தாரா... அல்லது வாலு படம் வெளியாக இருப்பதால் பப்ளிசிட்டிக்காக இப்படி செய்தாரா? எப்படியோ நல்ல விஷயம் செய்திருக்கிறார் சிம்பு.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions