இனி, சிம்புவைக் கையில் பிடிக்க முடியாது...!

Bookmark and Share

இனி, சிம்புவைக் கையில் பிடிக்க முடியாது...!

'போடா போடி' படத்துக்குப் பிறகு சிம்பு நாயகனாக நடித்து கடந்த இரண்டு வருடங்களாக எந்தப் படமும் வெளிவரவில்லை. அவையனைத்திற்கும் சேர்த்து இந்த ஆண்டு சிம்பு நடிக்கும் படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும் போல உள்ளது.

கடந்த ஒரு வாரமாகவே சிம்பு செய்திகளில் அதிகமாக இடம் பெற்று வருகிறார். 'என்னை அறிந்தால்' படத்தைப் பற்றி சிம்பு அடித்த கமெண்ட் விஜய் ரசிகர்களை உசுப்பேற்றி விட தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ரணகமாள இருந்தது.

அதற்கு முன்பே சிம்பு நடித்து வெளிவர உள்ள 'இது நம்ம ஆளு' படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. காதலர் தினத்தன்று இந்தப் படத்தின் 'ப்ளூப்பர்ஸ்' வெளியாக உள்ளது.

அதன் கடைசி வடிவத்தை சிம்பு பார்த்துவிட்டாராம். பாண்டிராஜ் மிகவும் வேடிக்கையாகவும், குறும்புடனும் உருவாக்கியுள்ளதாக சிம்பு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே சிம்புவும், நயன்தாராவும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்து பிரிந்து தற்போது இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடித்திருப்பது படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வருடமாக படம் இல்லையென்றாலும் நம்முடைய ரசிகர்கள் நம்முடன்தான் இருக்கிறார்கள் என சிம்பு நினைத்துக் கொண்டிருக்கிறார். அதுதான் 'இது நம்ம ஆளு' டீசருக்குக் கிடைத்த வெற்றி.

அடுத்து, நீண்ட நாள் கிடப்பில் இருந்த 'வாலு' படம் வெளிவருவது, கௌதம் மேனன் படம் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்பட இருப்பது, செல்வராகவனுடன் ஒரு ஆச்சரியக் கூட்டணி என சிம்புவின் 'டிராக்' இனி மாறப் போகிறது. அதனால், இனி சிம்புவைக் கையில் பிடிக்க முடியாது. 


Post your comment





Related News
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?
சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions