முதன் முறையாக மோதும் சிம்பு–கார்த்தி!

Bookmark and Share

முதன் முறையாக மோதும் சிம்பு–கார்த்தி!

சிம்புவுடன் நயன்தாரா, ஆன்ட்ரியா நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளை கடந்து திரைக்கு வர தயாராகியிருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. மீதம் உள்ள பாடல் காட்சிகளை முடித்து படத்தை வெளியிட தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 

‘இது நம்ம ஆளு’ படத்தை வருகிற மார்ச் 25–ந்தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதேநேரத்தில், கார்த்தி, நாகார்ஜூனா தமன்னா இணைந்து நடிக்கும் ‘தோழா’ படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தையும் மார்ச் 25–ந்தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

‘இது நம்ம ஆளு’ படத்தை பண்டிராஜ் இயக்குகிறார். இதில் சிம்பு, நயன்தாராவுடன் இணைந்து நடிப்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. 

‘தோழா’ படத்தில் கார்த்தி, தமன்னா மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் நாகார் ஜுனாவும் நடிக்கிறார். எனவே இந்த படமும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் படமாக உள்ளது.

மார்ச் 25–ல் ‘இது நம்ம ஆளு’, ‘தோழா’ படங்கள் திரைக்கு வருவதால், சிம்பு, கார்த்தி படங்கள் முதல்முறையாக மோதும் நிலை உருவாகி இருக்கிறது. 


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions