சாகும் வரை இவளிடம் தோற்கலாம் என்று நினைக்கும் பெண் வேண்டும்: சிம்பு

Bookmark and Share

சாகும் வரை இவளிடம் தோற்கலாம் என்று நினைக்கும் பெண் வேண்டும்: சிம்பு

நான் காதலிப்பதே வேடிக்கை தான். அதில் நான் 3 காதலை தாண்டி வந்துவிட்டேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. ஒரு காலத்தில் ரஜினி ஆக ஆசைப்பட்டேன். தற்போது அந்த ஆசை இல்லை என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

2 ஆண்டுகளாக சிம்புவின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு அவரின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதனால் மனிதர் சந்தோஷத்தில் உள்ளார்.

இந்நிலையில் அவர் முன்னணி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் காதல் பற்றி கூறுகையில்,காதல் முறிந்துவிட்டதே என்று அதையே நினைத்துக் கொண்டிருக்க முடியாது.

இதை உணர்ந்ததால் தான் என்னால் தற்போதும் ஹன்சிகா, நயன்தாராவுடன் நடிக்க முடிகிறது.தற்போது காதல் ஒரு பிளஸ் மற்றும் ஒரு மைனஸ் ஆக உள்ளது. முன்பெல்லாம் காதல் தோல்வி அடைந்தால் அந்த பெண்ணை பழிவாங்கத் துடித்தோம்.

தற்போது அந்த எண்ணம் இல்லாமல் அடுத்த வேலையை கவனிக்கச் செல்வது பிளஸ். ஆனால் பலர் இஷ்டத்திற்கு ஜாலியாக காதலிக்கிறார்கள். அதை காதல் என்று வேறு தவறாக நினைப்பது தான் மைனஸ்.நான் காதலிப்பதே வேடிக்கை தான்.

என்னை போன்றவன் காதலிக்க முடியாது. அப்படி இருந்தும் நான் 3 காதலை தாண்டி வந்துவிட்டேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை.காதலில் தோல்வி ஏற்பட்டால் உடனே அழக் கூடாது. நடந்தது நன்மைக்கே என்று நினைத்து வாழ்க்கையைத் தொடர வேண்டும்.நான் ஏன் திருமணம் செய்ய வேண்டும்? நான் ஒன்றும் திருமணத்திற்கு எதிரானவன் கிடையாது.

நல்ல புரிதல் உள்ள ஆணும், பெண்ணும் செய்து கொள்வது தான் திருமணம். தற்போது விவாகரத்தும் அதிகரித்துவிட்டது. சூழ்நிலைக்கேற்ப என்னையே மாற்றிக் கொள்வேன். யாரோ ஒரு பெண்ணை பார்த்து, பேசி, திருமணம் செய்து கொள்ள முடியாது. சாகும் வரை இவளிடம் தோற்கலாம் என்று நினைக்கும் அளவுக்கு உள்ள பெண் கிடைத்த பிறகே திருமணம்.ஒரு காலத்தில் ரஜினி சார் போன்று ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. தற்போது அது இல்லை என்றார் சிம்பு.


Post your comment





Related News
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions