
வரும் ஆனா வராது என்கிற கதையாகி விட்டது சிம்பு படங்களின் ரிலீஸ். பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு-நயன்தாரா நடித்துள்ள இது நம்ம ஆளு படம் இதோ இன்னும் சில தினங்களில் ரசிகர்களின் பார்வைக்கு வந்து விடும் என்கிற தொனியில் சில மாதங்களாக விளம்பரப்படுத்தினர்.
ஆனால் அது புலி வருது கதையாகி விட்டது. இந்த நிலையில், தற்போது அதற்கு முன்பே ஹன்சிகாவுடன் சிம்பு நடித்த வாலு படம் தற்போது ரிலீசுக்கு ரெடியாகி விட்டதாக அடுத்த பில்டப்பை அவிழ்த்து விட்டுள்ளனர்.
ஆக 2012ல் போடா போடிக்கு பிறகு அவர் நடிப்பில் எந்த படம் முதலில் வெளியாகப்போகிறது என்பதை புதிராகவே உள்ளது. இந்த நிலையில், தல அஜித்தின் ஆத்மார்த்தமான ரசிகரான சிம்பு, வாலு படத்தை மே மாதம் 1-ந்தேதி அதாவது தலயின் பிறந்த நாளான அன்று வெளியிட முடிவு செய்திருப்பதாக இதுவரை கூறி வந்தார்.
ஆனால் இப்போது அதையும் மே 9ந்தேதி என்று மாற்றம் செய்திருக்கிறார். காரணம், மே 1-ந்தேதி கமலின் உத்தமவில்லன் வெளியாவதால் தான் பின்வாங்கி விட்டதாக கூறியிருக்கிறார்.
ஆனால், அவர் இப்படி தேதிகளை மாற்றிக்கொண்டே வருவதை இணையதள ரசிகர்கள், வாலு படம் வரும் ஆனா வராது என்று கிண்டல் செய்து சிம்புவை வெறுப்பேற்றி வருகின்றனர்.
Post your comment