தாடி, மீசை கெட்டப்பில் சிம்பு!

Bookmark and Share

தாடி, மீசை கெட்டப்பில் சிம்பு!

கடந்த இரண்டரை ஆண்டுகள் சிம்புவுக்கு சோதனை காலம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த காலகட்டத்தில் அவர் கெஸ்ட் ரோலில் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா, இங்க என்ன சொல்லுது போன்ற படங்கள் மட்டுமே வெளியாகின.

ஆனால் அவர் ஹீரோவாக நடித்த வேட்டை மன்னன், வாலு, இது நம்ம ஆளு என எந்த படமும் திரைக்கு வரவில்லை. இதோ ரிலீஸ் ஆகப்போகிறது என்று சொல்லப்பட்ட வாலு படம் பற்றியும் தற்போது எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில், என்னை அறிந்தால் படத்துக்கு முன்பு சிம்புவை வைத்து சில நாட்கள் படமாக்கி விட்டு கிடப்பில் போட்டிருந்த சட்டென்று மாறுது வானிலை படத்தை அச்சம் என்பது மடமையடா என்ற டைட்டீலில் தற்போது படமாக்கி வருகிறார் கெளதம்மேனன்.

அதேபோல், இரண்டாம் உலகம் படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கும் புதிய படத்திலும் தற்போது நடிக்கிறார் சிம்பு. இந்த படத்தில் இருந்து த்ரிஷா விலகி விட்ட நிலையில், தற்போது டாப்சி, கேத்ரின் தெரசா என ஒன்றுக்கு இரண்டு ஹீரோயினிகள் கமிட்டாகி விட்டனர்.

ஆக, இந்த இரண்டு படங்களும் தற்போது சிம்புவுக்கு புதிய நம்பிக்கையை துளிர்விட வைத்துள்ளன. மேலும், இந்த இரண்டு படங்களிலுமே அவர் லேசான தாடி, மீசை கெட்டப்பில் நடிக்கிறாராம்.


Post your comment





Related News
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions