புதிய படங்களின் மீது கவனத்தை திருப்பிய சிம்பு!

Bookmark and Share

புதிய படங்களின் மீது கவனத்தை திருப்பிய சிம்பு!

ஏற்கனவே பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு திரைக்கு வராமல் போன வாலு படம் இன்று ஜூலை17-ந்தேதி கண்டிப்பாக வெளியாகி விடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

அதோடு தனுஷின் மாரி படமும் வெளியாவதால் நீண்ட நாளைக்குப்பிறகு சிம்புவும், தனுசும் நேருக்கு நேர் மோதிக்கொள்கிறார்கள் என்று ரசிகர்களும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தார்கள்.

ஆனால், மறுபடியும் விதி விளையாடி விட்டது. நீதிமன்றமே வாலு படத்தை வெளியிட தடை விதித்து விட்டதால், தடை செய்தவர்களுடன் தற்போது சமசர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதனால் இம்மாதம் இறுதியில் வாலு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். அதுவும் கடைசி நேரத்தில்தான் உறுதியாகும். இதனால் ரொம்பவே மனசுடைந்து போயிருக்கிறார் சிம்பு.

அவருக்கு நெருக்கமான நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த நிலையில், அவரது ஆரூயிர் நண்பரான தனுசும் சிம்புவுக்கு ஆறுதல் கூறியிருக்கிறாராம்.

அவர்களிடம், ஒருமுறை அல்ல எத்தனையோ முறை இதுபோன்ற தடைகளை பார்த்து விட்டேன். அதனால் இனிமேல் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டு நான் கலங்கி நிற்கப்போவதில்லை. எனது தற்போதைய கவனம் அச்சம் என்பது மடமையடா, கான் படங்களின் மீதுதான் உள்ளது என்கிறாராம் சிம்பு.


Post your comment





Related News
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions