படப்பிடிப்பில் காயமடைந்த சிம்பு!

Bookmark and Share

படப்பிடிப்பில் காயமடைந்த சிம்பு!

சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தற்போது இப்படத்திற்கான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அமைந்த இந்த சண்டைக் காட்சியின் போது, சிம்புவிற்கு மூக்கு மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

சிம்புவுக்கு அடிப்பட்ட விஷயம் தெரிந்தவுடன் சிம்புவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைத்துள்ளனர். ‘வாலு’ படத்திற்குப் பிறகு சிம்புவின் ரசிகர்கள் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு இப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் சிங்கிள் டிராக் பாடலான ‘தள்ளி போகாதே...’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.


Post your comment





Related News
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
கமலுக்கு பேரனாகும் சிம்பு
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
சீமானுடன் கைகோர்க்கும் சிம்பு
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions