இரவோடு இரவாக இதை மெரீனாவுக்கு கொண்டு செல்லுங்கள். சிம்பு யோசனை

Bookmark and Share

இரவோடு இரவாக இதை மெரீனாவுக்கு கொண்டு செல்லுங்கள். சிம்பு யோசனை

ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒடுக்க ராணுவமே வந்தாலும் கவலையில்லை என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக சினிமா நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில்,நடிகர் சிம்பு தி.நகரில் உள்ள தனது வீட்டிற்கு முன்னர் நேற்று இரவிலிருந்து அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.சிம்புவின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நூற்றுக்கணக்கான அவரது ரசிகர்கள்,அவரது வீட்டு முன்னர் கூடியுள்ளனர்.

இந்நிலையில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய சிம்பு,”ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒடுக்குவதற்காக சென்னைக்கு மத்திர ராணுவம் வந்திருப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றன. ராணுவம் வருவது குறித்தெல்லாம் நமக்கு பிரச்சனைகள் இல்லை.ஆனால் தமிழகம் முழுவதும் அத்தனை லட்சம் பேர் போராடி வருகிறார்கள்.

அவர்களை யாராவது தாக்கினால்,அது மிகப்பெரிய பாவம்.அவர்கள் அடி வாங்க வேண்டியவர்கள் கிடையாது.இந்த மண்ணின் புதல்வர்களை நாம் காப்பாற்ற வேண்டும்.

ராணுவமே வந்தாலும்,இரவோடு இரவாக எங்கெல்லாம் தேசியக் கொடி இருக்கிறதோ,அதையெல்லாம் மெரினா கடற்கரையில் இருப்பவர்களுக்கு உடனடியாக கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

தேசிய கொடி மேலிருந்தால்,யார் அவர்களை தாக்க முடியும்? தேசிய கொடி மேலே இருக்கும் போது,நீங்கள் அடித்துப் பாருங்கள் பார்க்கலாம்..!” என கொந்தளிப்பாக கூறினார்.


Post your comment





Related News
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions