90 நாட்களில் சிம்புவின் சாதனை என்ன தெரியுமா?

Bookmark and Share

90 நாட்களில் சிம்புவின் சாதனை என்ன தெரியுமா?

நடிகர் சிம்புவிற்கு கடந்த 2016 வருடம் முதல் நல்ல காலம் தான் போல. நடக்கின்ற நிகழ்வுகளும் அதற்கு சாதகமாய் அமைகிறது. ஆனால் அதற்கு முந்தய வருடம் நிலைமை அப்படியே தலைகிழாக இருந்தது.

பீப் பாடல் பிரச்சனை, படம் வெளியாகாதது என தொடர்ந்து பல சிக்கல்கள் சந்தித்தவருக்கு மீண்டும் கைகொடுத்தது கௌதம் மேனன்.

இவர் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா படம் தள்ளிபோய் வெளியானாலும் பயங்கர வசூல் செய்தது.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு மீண்டும் இவர்களின் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி இதுவென்று சொல்லலாம். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் தான்.

தள்ளிபோகாதே வீடியோ பாடல் கடந்த வருடம் நவம்பர் 30ம் தேதி வெளியானது. இன்னும் 90 நாட்களை முழுமையாக எட்டாத நிலையில் இதன் இணையதளத்தில் பார்த்தவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை தாண்டியுள்ளது.

இப்போது சொல்லுங்கள் இது சிம்புவிற்கு கிடைத்த வெற்றி தானே!


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions